கள்ளக்காதல் விவகாரம்; மனைவிக்கு விஷ ஊசி செலுத்திய கணவன், பெண் கைது

Published : Mar 02, 2023, 07:19 PM IST
கள்ளக்காதல் விவகாரம்; மனைவிக்கு விஷ ஊசி செலுத்திய கணவன், பெண் கைது

சுருக்கம்

கள்ளக் காதல் விவகாரத்தில் பெண்ணுக்கு விஷ ஊசி செலுத்தி கொல்ல முயன்றதாக கணவர் கைது செய்யப்பட்டார். மேலும் தலைமறைவாக இருந்த கள்ளக் காதலி உள்பட 2 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீதரன். தனியார் மருத்துவமனையில் உணவக மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கீர்த்தனா. இவர்களது மகன் சாய் சர்வேஷ். ஸ்ரீதரன் தனது குடும்பத்தினருடன் அன்னூர் மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சியில் உள்ள செந்தாம்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். 

இந்தநிலையில் ஸ்ரீதரனுக்கும், அவருடன் வேலை செய்யும் ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக் காதலாக மாறியது. இதனை கீர்த்தனா கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மிகுந்த ஆத்திரமடைந்த ஸ்ரீதரன் கீர்த்தனாவை தாக்கி உள்ளார். 

இந்தநிலையில் கள்ளக் காதல் விவகாரத்தில் கணவர் உள்பட 3 பேர் தனக்கு விஷ ஊசி செலுத்தி கொல்ல முயன்றதாக கீர்த்தனா அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் ஸ்ரீதரன், அவரின் கள்ளக் காதலி ரம்யா, நண்பர் பழனி  ஆகிய 3 பேரும் சேர்ந்து கீர்த்தனாவுக்கு விஷ ஊசி செலுத்தி கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து ஸ்ரீதரனை காவல் துறையினர் கைது செய்தனர்.

திண்டுக்கல்லில் வியாபாரி பட்டப்பகலில் வெட்டி படுகொலை

மேலும் தலைமறைவான ரம்யா, பழனியை காவல் துறையினர் தேடி வந்தனர். இதற்கிடையே  ரம்யா, பழனி ஆகிய 2 பேரும் கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜே.புதூர் பகுதியில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு அன்னூர் காவல் துறையினர் விரைந்து சென்று ரம்யா, பழனி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

டெபாசிட் தொகையை தக்கவைத்த அதிமுக
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!