கன்னத்தில் அடித்தான்... எட்டி மிதி மிதின்னு மிதித்தான்!! தோசை மாவு மேட்டரில் தாக்கப்பட்ட ஜெயமோகன் சோகப்பதிவு!!

By sathish kFirst Published Jun 15, 2019, 2:24 PM IST
Highlights

தோசை மாவு மேட்டரில் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் எழுத்தாளர் ஜெயமோகன் நடந்தை தனது இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.
 

தோசை மாவு மேட்டரில் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் எழுத்தாளர் ஜெயமோகன் நடந்தை தனது இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.

தன்னைத் தகாத வார்த்தைகள் சொல்லியபடி தாக்கியதாக ஜெயமோகன் புகார் அளித்திருக்கிறார். வசந்தம் கடை உரிமையாளர் செல்வம், தனது மனைவியை ஜெயமோகன் அநாகரிகமாகத் திட்டினார் என்று புகார் கொடுத்திருக்கிறார். இரு தரப்புப் புகார்களின் மீதும் வழக்குப் பதிவு செய்த நேசமணி காவல் நிலையத்தில். ஜெயமோகனைத் தாக்கிய கடை ஓனர் செல்வத்தை இன்று கைது செய்துள்ளது. 

எழுத்தாளரான ஜெயமோகன் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில், சாரதா நகரில் வசித்துவருகிறார். சாரதா நகர் பகுதியில் இருக்கும் வசந்தம் என்ற கடைக்கு நேற்று மாலை சென்ற ஜெயமோகன், இரு மாவு பாக்கெட்டுகள் வாங்கியிருக்கிறார். வீட்டில் யாரும் இல்லாததால் மாவு வாங்கி தோசை செய்ய  மாவு வாங்கச் சென்றுள்ளார். மாவு வாங்கிக் கொண்டு வீட்டுக்குத் திரும்பிய ஜெயமோகன் கொஞ்ச நேரத்தில் மீண்டும் கடைக்குச் சென்றிருக்கிறார்.  

அப்போது பழைய மாவை கொடுத்திருக்கீங்கனு சத்தம் போட்டாரு, கடை ஓனரோட வீட்டுக்கார அம்மாதான் நின்னாங்க. அவங்க மேல மாவை தூக்கி வீசிட்டாரு. அதைப் பாத்த அந்த மாவுக்கடை ஓனர் வேகமா வந்து ரெண்டு பேருக்கும் தகராறு ஆயி அடிதடி சண்டை நடந்ததாக அங்குள்ளவர்கள் சொல்கிறார்கள்.

வீட்டுக்குச் சென்ற தன்னை மீண்டும் வந்து தாக்கியதாக ஜெயமோகன் தனது வெப்சைட்டில் இந்த அடிதடி குறித்து எழுதியிருக்கிறார். 

அதில்; இச்செய்தியைப் பற்றி பலர் கேட்டனர். சேதி உண்மை. ஒரு சிறு விவகாரத்தால் நான் தாக்கப்பட்டேன். அருகில் உள்ள வசந்தம் கடையில் இரு பாக்கெட் தோசை மாவு வாங்கினேன். இரண்டு நாள் பழைய புளித்த மாவை கொடுத்து விட்டார்கள். கடையில் இருந்தவர் உரிமையாளரின் மனைவி. பாக்கெட்டை திரும்பி எடுக்க மறுத்து என்னை வசைபாட ஆரம்பித்தார் நான் கோபமாக மாவு பாக்கெட்டுகளை நீயே வைத்துக்கொள் என வீசிவிட்டு திரும்பினேன். அருகே அவள் கணவன் நின்றிருந்தான். உரிமையாளன். பெரியகுடிகாரன். ஏற்கனவே குடித்து தகராறு செய்தபடி நின்றிருக்கிறான். நான் கவனிக்கவில்லை.

என்னை தாக்க ஆரம்பித்தான். தாடையில் அடித்தான். கீழே விழுந்தபோது உதைத்தான். என் கண்ணாடி உடைந்தது. பலமுறை தாக்கி கெட்டவார்த்தை சொன்னான். பிடித்து அகற்றினர். அவனுடைய கடை வேலையாட்கள் அவர்கள். வீடு வந்தேன். அதற்குள் வீட்டுக்கு வந்து என் மனைவியையும் மகளையும் வசைபாடினான். வீட்டுக்குள் நுழைய முயன்றான். அதன் பின்னரே காவல் நிலையம் சென்று புகார் கொடுத்திருக்கிறேன்.

காவல் நிலையம் சென்ற பின்னர்தான் ஒரு கேடியின் தொடர்புகள் புரிந்தது. வழக்கறிஞர்கள். அரசியல் தலைவர்கள் வந்து அவனுக்காக வாதாடினார்கள். ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் இருக்கிறேன். சிறு காயங்கள் உள்ளன வழக்கு பதிவு செய்யப்படும் என நினைக்கிறேன். நீதி கிடைக்குமென்றும். என்று குறிப்பிட்டிருக்கிறார் ஜெயமோகன்.

click me!