உயிருக்கு உயிரா காதலிச்சேன் ஆனா இப்படி வாயிலயே வெட்டுவார்னு நினைச்சு கூட பாக்கல... உருகிய தேன்மொழி

By sathish kFirst Published Jun 15, 2019, 1:15 PM IST
Highlights

நான் அவரை உயிருக்கு உயிரா காதலிச்சேன், ஆனா இப்படி அரிவாளால வாயிலயே வெட்டுவார்னு நான் நினைச்சு கூட பாக்கல என  தனது காதலன் மேல் வைத்திருந்த நம்பிக்கையை பற்றி உருக்கமாக கூறியுள்ளார் தேன்மொழி.
 

நான் அவரை உயிருக்கு உயிரா காதலிச்சேன், ஆனா இப்படி அரிவாளால வாயிலயே வெட்டுவார்னு நான் நினைச்சு கூட பாக்கல என  தனது காதலன் மேல் வைத்திருந்த நம்பிக்கையை பற்றி உருக்கமாக கூறியுள்ளார் தேன்மொழி.

நேற்று மாலை 6 மணியளவில் சுரேந்தர் சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் உட்கார்ந்து இருந்தார். தேன்மொழி, பணி முடிந்து அங்கு வந்தார். இருவரும் ரெயில் நிலையத்தில் உட்கார்ந்து நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். திடீரென்று அவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. உட்கார்ந்து பேசிய அவர்கள் பின்னர் நின்று கொண்டு சத்தம் போட்டு பேசினார்கள். உச்சக்கட்ட மோதலில் சுரேந்தர் தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளை கையில் எடுத்து தேன்மொழியை சரமாரியாக வெட்டினார். அவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றபோதும், விடாமல் துரத்தி, துரத்தி வாயிலயே வெட்டினார்.

இதில், தேன்மொழியின் தாடை மற்றும் கன்னம் பகுதியில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. அவரது கழுத்து மற்றும் கையிலும் அரிவாள் வெட்டு விழுந்தது. அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி கிடந்தார். அப்போது சுரேந்தர் ரெயில் மீது பாய்ந்தார். ஆனால் ரெயில் பெட்டியில் மோதி, தலையில் பலத்த காயத்தோடு பிளாட்பாரத்தில் தூக்கி எறியப்பட்டார். மூச்சு பேச்சு இல்லாமல் அவரும் உயிருக்கு போராடினார். உடனடியாக ரயில்வே அதிகாரிகள் அந்த இருவரையும் கீழ்ப்பாக்கம் அரசு அருத்துவமனையில்  சிகிச்சைக்காக சேர்ந்ததனர். இதில் இருவரும் ஆபத்தான கட்டத்தில் இருந்தனர்.

இந்நிலையில்  நேற்று இரவு 10.30 மணிக்கு கண் விழித்த தேன்மொழியிடம். டாக்டர்கள்  என்ன நடந்ததென்று விசாரிக்கையில்; அவர் பெயர் சுரேந்தர். நாங்க 3 வருஷமா காதலித்தோம். ஆனா நாங்க இருவரும் வேற வேற சாதியை சேர்ந்தவர்கள். வீட்டுல விஷயம் தெரிந்துவிட்டது. ரொம்பவும் எதிர்த்தாங்க. ஆனாலும் நாங்கள் கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைச்சோம். அதுக்கு என் வீட்டில் கோபப்பட்டார்கள். சுரேந்தருக்கு கட்டித்தரவே மாட்டோம்னு சொல்லிட்டாங்க. அது மட்டுமில்லை. சுரேந்தரை நான் பாக்கவும் கூடாது, பேசவும்கூடாதுன்னு கண்டிஷன் போட்டுட்டாங்க. அதனாலதான் அவர்கிட்ட பேசுறதை நிறுத்திட்டேன். இதுக்கு நடுவுல எனக்கு வேலை கிடைச்சதால, நான் சென்னைக்கு வந்துட்டேன். 

ஆனாலும் சுரேந்தர் என்னை விடவே இல்லை. எப்படியாவது என்கிட்ட பேசணும்னு முயற்சி பண்ணிட்டே இருந்தார். நேரில் பார்த்து ஒருமுறை என் நிலைமையை எடுத்து சொல்லலாம்னுதான் சாயங்காலம் சேத்துப்பட்டு ரயில்வே ஸ்டேஷன் போனேன். அங்க நாங்க  ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருந்தோம். அப்போது வீட்டில் நடக்கிற பிரச்சனையை எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்க்காத சுரேந்தர்க்கும், எனக்கும் வாக்குவாதம் வந்துடுச்சு.

அப்போகூட என்கிட்ட அவர் சண்டை போடுவார்னுதான் நினைச்சேன். நான் அவரை உயிருக்கு உயிரா காதலிச்சேன், ஆனா இப்படி அரிவாளால வாயிலயே வெட்டுவார்னு நினைச்சு கூட பாக்கல என  தனது காதலன் மேல் வைத்திருந்த நம்பிக்கையை பற்றி உருக்கமாக கூறியுள்ளார்.

click me!