பிரபல எழுத்தாளருக்கு அடி, உதை ! பொருட்கள் வாங்கும் போது கடைக்காரருடன் தகராறு !!

By Selvanayagam P  |  First Published Jun 14, 2019, 11:47 PM IST

பிரபல எழுத்தாளரும், சினிமா கதை வசன கர்த்தாவுமான ஜெயமோகன் நாகர்கோவில் தாக்கப்பட்டார்.
 


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் வசிப்பவர் எழுத்தாளர் ஜெயமோகன் 60. தமிழ் மற்றும் மலையாளத்தில் பல்வேறு படைப்புகள் கொடுத்துள்ளார்.

Tap to resize

Latest Videos

தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் விருதுகள் குவித்த முழு நேர எழுத்தாளர். இவர் பாபாநாசம், கடல், சர்க்கார் போன்ற திரைப்படங்களுக்கு  கதை வசனம் எழுதியுள்ளார்

நேற்று அவர் பார்வதிபுரத்தில் உள்ள கடைக்கு சென்றிருந்தார். பொருட்கள் வாங்கும்போது கடைக்காரருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

அப்போது அங்கிருந்த கும்பல் அவரை அடித்து உதைத்துள்ளனர். இதையடுத்து  வடசேரி காவல்நிலையத்தில்  ஜெயமோகன் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

click me!