ஒரு தலைக் காதலால் வந்த விபரீதம் ? சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு !!

Published : Jun 14, 2019, 11:29 PM IST
ஒரு தலைக் காதலால் வந்த விபரீதம் ? சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு !!

சுருக்கம்

சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம் பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் அரிவாளால் வெட்டிவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

சென்னை சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் தேன்மொழி என்ற இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் அரிவாளால் வெட்டினார்.  பெண்ணை அரிவாளால் வெட்டிய அந்த நபர், மின்சார ரயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். 

படுகாயமடைந்த இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் இளம்பெண்ணை அரிவாளால் வெட்டியவர்  ஈரோட்டைச் சேர்ந்த சுரேந்தர் என்பது தெரியவந்துள்ளது.  தேன்மொழியை சுரேந்தர் ஒரு தலையாக காதலித்தாகவும் அதனால் ஏற்பட்ட பிரச்சனையில் அவர் தேன்மொழியை தாக்கியதாக கூறப்படுகிறது. அரிவாள் வெட்டு சம்பவம் தொடர்பாக எழும்பூர் ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண்ணை ராம்குமார் என்ற வாலிபர் அரிவாளால் சரமாறியாக வெட்டிய சம்பவம் சென்னை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

அங்கிள் இப்படியெல்லாம் செய்யாதீங்க ரொம்ப தப்பு.. கதறிய 12 வயது சிறுமி.. விடாத கொடூரன்.!
கண் விழித்து பார்த்த மருத்துவ மாணவி.! சிதறி கிடந்த ஆடைகள்.! ஒரு வேகத்தில் அப்படி செஞ்சுட்டேன்.! டாக்டர் கதறல்