கள்ளக்காதலனுடன் உல்லாசம்..! இடையூறாக இருந்த மகனை திட்டம் போட்டு தீர்த்துக்கட்டிய கொலைகார தாய்..!

Published : Feb 09, 2020, 05:31 PM ISTUpdated : Feb 09, 2020, 05:43 PM IST
கள்ளக்காதலனுடன் உல்லாசம்..! இடையூறாக இருந்த மகனை திட்டம் போட்டு தீர்த்துக்கட்டிய கொலைகார தாய்..!

சுருக்கம்

அஞ்சலிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த காமராஜ் என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த சதிஷ் காமராஜை கண்டித்திருக்கிறார். வீட்டிற்கும் வரக்கூடாது என எச்சரித்துள்ளார். பின் வளர்ப்பு மகன் என அறிந்த பிறகு சதீஷின் நடவடிக்கையில் மேலும் மாற்றம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சதீஷை கொலை செய்ய அஞ்சலி முடிவெடுத்துள்ளார். 

சென்னை ஆவடி அருகே இருக்கும் கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி. இவருக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். மகன் இல்லாத காரணத்தால் சதிஷ்(19) என்கிற வாலிபரை சிறு வயது முதல் வளர்ப்பு மகனாக தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டார். அதன்பிறகு மகள்கள் மற்றும் மகனுடன் அஞ்சலி வசித்து வந்துள்ளார்.

இந்தநிலையில் அஞ்சலிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த காமராஜ் என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த சதிஷ் காமராஜை கண்டித்திருக்கிறார். வீட்டிற்கும் வரக்கூடாது என எச்சரித்துள்ளார். பின் வளர்ப்பு மகன் என அறிந்த பிறகு சதீஷின் நடவடிக்கையில் மேலும் மாற்றம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சதீஷை கொலை செய்ய அஞ்சலி முடிவெடுத்துள்ளார். தனது கள்ளகாதலனான காமராஜுடன் சேர்ந்து அதற்கான திட்டத்தையும் தீட்டியுள்ளார். 

அதன்படி மதுகுடிப்பதற்காக சதீஷை அழைத்து சென்று அங்கு வைத்து கூலிப்படைமூலம் சரமாரியாக வெட்டி கொலைசெய்துள்ளார் காமராஜ். பின் அங்கிருந்து அனைவரும் தப்பிவிட்டனர். சதிஷ் கொலைசெய்யப்பட்டு கிடைக்கும் தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து அஞ்சலி கொலையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதனடிப்படையில் அஞ்சலி, காமராஜ், கூலிப்படையைச் சேர்ந்த சுரேஷ், விக்னேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருக்கும் முத்துக்குமார் என்பவர் தேடப்பட்டு வருகிறார்.

எவ்வளவு பெரிய நடிகரா இருந்தாலும் சரி.. சட்டத்துக்குள்ள கொண்டு வாங்க..! அன்புமணி ராமதாஸ் அதிரடி..!

PREV
click me!

Recommended Stories

கதறிய தங்கை.. பதறிய அக்கா கவிப்பிரியா.. ரத்த வெள்ளத்தில் பிரசாத் அலறல்.. நடந்தது என்ன?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பெண் தாதா அஞ்சலைக்கு 2 ஆண்டு சிறை! எந்த வழக்கில் தெரியுமா?