கஞ்சாவுக்கு அடிமையான கடைசி மகன்..! ஆத்திரத்தின் உச்சியில் கொடூரமாக கொன்ற தாய்..!

By Manikandan S R S  |  First Published Jan 31, 2020, 12:11 PM IST

மதுரை அருகே போதை பழக்கத்திற்கு அடிமையான இளைய மகனை, மூத்த மகனுடன் சேர்ந்து தாய் கொலை செய்துள்ளார்.


மதுரை மாவட்டம் வண்டியூரைச் சேர்ந்தவர் சிக்கந்தர் மைதீன். இவரது மனைவி ஹபீபா பேகம். இந்த தம்பதியினருக்கு யாசர் அரபாத், அசாருதீன் என இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இவர்களில் இளைய மகன் அசாருதீனுக்கு மது, கஞ்சா போன்ற போதை பழக்கங்கள் இருந்திருக்கிறது. தினமும் கஞ்சா அடிப்பதை தனது வழக்கமாகவே அசாருதீன் வைத்துள்ளார்.

Tap to resize

Latest Videos

போதை பொருட்கள் வாங்குவதற்காக வீட்டில் தாய், தந்தையை தொந்தரவு செய்ததோடு மட்டுமில்லாமல் அவர்களிடம் தகராறும் செய்து வந்திருக்கிறார். சம்பவத்தன்றும் பெற்றோரை தாக்கிய அசாருதீன் தகாத வார்த்தைகளாலும் திட்டியிருக்கிறார். இதில் ஆத்திரமடைந்த யாசர் அராபத் மற்றும் அவரது தாய் ஹபீபா பேகம், அசாருதீனை கொலை செய்ய முடிவெடுத்தனர். அதன்படி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த அசாருதீனின் கை,கால்களை துணியால் கட்டி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்படி சிக்கந்தர் மைதீன் வீட்டிற்கு போலீசார் விரைந்தனர். அங்கு சடலமாக கிடந்த அசாருதீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.கொலை வழக்கு பதிந்த காவலர்கள் ஹபீபா பேகம் மற்றும் யாசர் அராபத் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மது போதைக்கு அடிமையான வாலிபரை தாய் மற்றும் அண்ணன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read: 'வாடகை கட்டிடமா.. ஆகச்சிறந்த அந்தர்பல்டியால இருக்கு'..! ஸ்டாலினை விடாது வெறுப்பேற்றும் ராமதாஸ்..!

click me!