ஆவடியில் பயங்கரம்..! ஆயுத தொழிற்சாலை காவலாளி சரமாரியாக சுட்டுக்கொலை..!

Published : Jan 31, 2020, 11:38 AM ISTUpdated : Jan 31, 2020, 11:43 AM IST
ஆவடியில் பயங்கரம்..! ஆயுத தொழிற்சாலை காவலாளி சரமாரியாக சுட்டுக்கொலை..!

சுருக்கம்

ஆவடியில் தொழிற்சாலை காவலாளி ஒருவர் சக ஊழியரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சென்னை அருகே இருக்கும் ஆவடியில் ஏராளமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு மத்திய அரசுக்கு சொந்தமான கனரக வாகன தொழிற்சாலையும் அமைந்துள்ளது. இதில் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் பணியாற்றி வருகின்றனர். திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த நீலாம்பர் சிங்கா என்பவரும் பணியாற்றி வருகிறார்.

பணிமாற்றத்தின் போது இவருக்கும் ஹிமாச்சலப்பிரதேசத்தைச் சேர்ந்த கிரிஜேஷ்குமார் என்பருக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த நீலாம்பர் சிங்கா, துப்பாக்கியால் கிரிஜேஷ்குமாரை சுட்டார். இன்சாஸ் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் கிரிஜேஷ் குமாரின் வலது கழுத்து, இடது முழங்கால் உள்ளிட்ட ஏழு இடங்களில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார். அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த பாதுகாப்பு அதிகாரி கர்ணல் செரியன், துப்பாக்கியை கீழே போடு சரணடைந்து விடுமாறு நீலாம்பர் சிங்காவை எச்சரித்தார். இல்லையெனில் சுட்டுப்பிடிக்க நேரிடும் என்றார். இதையடுத்து நீலாம்பர் சிங்கா சரணடைந்தார். அவரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடைபெறு வருகிறது.

Also Read: தமிழ் குடமுழுக்கு..? நோ சொன்ன நீதிபதிகள்..! இருமொழிக்கும் சம உரிமை வழங்கி அதிரடி..!

PREV
click me!

Recommended Stories

திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!
காரில் திமுக கொடியுடன்.. ஃபுல் மப்பில் போயி யாரையாவது சாக அடிக்கவா? இப்படி பேசிட்டு கேஸ் போடாத போலீஸ்