கோவையில் வருமானவரித்துறை அதிகாரி என்று கூறி மகளிர் விடுதியில் லேப்டாப் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவையில் வருமானவரித்துறை அதிகாரி என்று கூறி மகளிர் விடுதியில் லேப்டாப் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டத்தில் ஏராளமான கல்லூரிகளும் தொழில் நிறுவனங்களும் இயங்கி வரும் நிலையில் வேலைக்கு செல்லும் பெண்களும் கல்லூரி மாணவிகளும் தனியார் விடுதிகளில் தங்கி வருகின்றனர். இதனால் கோவையில் தனியார் மகளிர் விடுதிகளும் அதிகளவில் இயங்கி வருகிறது.
இதையும் படிங்க: நகைக்கடை ஷட்டர் உடைப்பு..! 9 கிலோ தங்கம், வைரம் கொள்ளை-சிசிடிவி ஹார்டு டிஸ்கையும் கொண்டு சென்ற கொள்ளையர்கள்
அந்த வகையில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மகளிர் விடுதியில் மதுரையை சேர்ந்த ராஜலட்சுமி என்ற பெண் தங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த பெண் வருமான வரி துறையில் வேலை செய்வதாகவும் ஐஏஎஸ் படிப்பதற்காக கோச்சிங் சென்டர் செல்வதற்காக இங்கு வந்துள்ளதாகவும் கூறி தங்க அறை கேட்டுள்ளார். அவர் கூறியதை நம்பிய விடுதி வார்டன் கார்த்தியாயினி, அவருக்கு தங்கதற்காக அரை ஒதுங்கி கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: அம்மா என்னை மீறி நான் தப்பு செஞ்சுட்டேன்.. என்னை மன்னிச்சிடுமா கதறிய சிறுமி.. வாலிபரை அலேக்கா தூக்கிய போலீஸ்.!
இந்த நிலையில் ராஜலட்சுமி அங்கு இருந்த சக பெண்களிடம் இருந்து 30 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் இரண்டு லேப்டாப் களை எடுத்துக்கொண்டு தலைமறைவாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து விடுதி வார்டன் கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் தலைமறைவான ராஜலட்சுமியை தேடி கண்டுப்பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.