நகைக்கடை ஷட்டர் உடைப்பு..! 9 கிலோ தங்கம், வைரம் கொள்ளை-சிசிடிவி ஹார்டு டிஸ்கையும் கொண்டு சென்ற கொள்ளையர்கள்

By Ajmal KhanFirst Published Feb 10, 2023, 12:22 PM IST
Highlights

சென்னை பெரம்பூரில் பிரபல நகைக்கடையில் கடையின் ஷட்டரை வெல்டிங் மூலம் உடைத்து 5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சென்னையில் நகைக்கடை கொள்ளை

சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பெரவலூர் பகுதியில் பிரபல நகைக்கடையான ஜே எல் கோல்டு ஹவுஸ் என்ற நகைக்கடை இயங்கி வருகிறது.  ஸ்ரீதர் என்பவருக்கு சொந்தமான இந்த நகைக்கடை கடந்து 8 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.. இந்தநிலையில் நேற்று இரவு 9.45 மணி்க்கு நகை கடையினை  பூட்டிவிட்டு ஊழியர்கள் மற்றும் உரிமையாளர் ஸ்ரீதர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து இன்று காலை 9 மணி அளவில் கடையை திறக்க வந்த போது கடையின் இரும்பு ஷட்டர் வெல்டிங் மிஷினால் அறுக்கப்பட்டு தனியாக உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.  இதனையடுத்து நகைகடைக்குள் சென்று பார்த்த போது பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதானல் அதிர்ச்சி அடைந்த நகைக்கடை உரிமையாளர் ஸ்ரீதர் திரு வி க நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கேஜிஎப் பட பாணியில் கடலில் வீசப்பட்ட தங்க கட்டிகள்.! ஸ்கூபா வீரர்கள் உதவியோடு 12 கிலோ தங்கத்தை மீட்ட கடற்படை

 9 கிலோ தங்க நகை கொள்ளை

இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது நகை கடையில் வைத்திருந்த ஒன்பது கிலோ தங்க நகை மற்றும் 20 லட்ச ரூபாய் மதிப்பிலான வைரக்கல் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது மேலும் அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்பட்ட ஹார்ட் டிஸ்கையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

கொள்ளையடிக்கப்பட்ட நகைக்கடையில் வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யா பாரதி  புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வரன் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொள்ளை சம்பவம் தொடர்பாக  நான்கு உதவி ஆணையர்கள் தலைமையில் 9 தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் கொள்ளையர்கள் தைரியமாக இரும்பு ஷட்டரை வெல்டிங் மிஷனால் அறுத்து கொள்ளையில் ஈடுபட்டது. அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படியுங்கள்

இனியும் ஒரு நாள் கூட கிடப்பில் போடக்கூடாது.! ஒப்புதல் அளியுங்கள், இல்லையென்றால் திருப்பி அனுப்புங்கள்-அன்புமணி

click me!