கேஜிஎப் பட பாணியில் கடலில் வீசப்பட்ட தங்க கட்டிகள்.! ஸ்கூபா வீரர்கள் உதவியோடு 12 கிலோ தங்கத்தை மீட்ட கடற்படை

By Ajmal Khan  |  First Published Feb 9, 2023, 2:30 PM IST

ராமேஸ்வரம் அருகே உள்ள மண்டபம் கடலில் கடத்தல் காரர்கள் வீசிய பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகளை ஸ்கூபா டைவிங் வீரர்கள் உதவியுடன் இந்திய கடற்படை அதிகாரிகள் தேடி வந்த நிலையில்,  கடலில் வீசப்பட்ட 12 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன் மதிப்பு 7.5 கோடி என தெரியவந்துள்ளது..


இலங்கையில் இருந்து தங்கம் கடத்தல்

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கும், தமிழகத்தில் இருந்து இலங்கைக்கும் நாள்தோறும் கடத்தல் சம்பவங்கள் ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் நடைபெற்று வருகிறது. போதைப்பொருட்கள், கடல் அட்டைகள், நட்சத்திர ஆமைகள், உணவு பொருட்கள், உரம் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவது வாடிக்கையாக நடைபெற்று வரும் நிலையில்  தற்போது தங்க கட்டிகள் கடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இலங்கையில் இருந்து ராமேஸ்வரம் கடல் பகுதிக்கு நாட்டுப்படகில் தங்க கட்டிகளை கடத்தி வருவதாக திருச்சி மத்திய புலனாய்வு துறைக்கு தகவல் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து நேற்றைய தினம் ராமேஸ்வரம் அருகே உள்ள மண்டபம், உச்சிப்புளி, தொண்டி ஆகிய  கடற்கரை பகுதியில் இந்திய கடலோர காவல் படைகள் மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

Tap to resize

Latest Videos

எடப்பாடியால் இரட்டை இலை சின்னத்திற்கான செல்வாக்கு குறைந்து விட்டது.! அதிமுகவினரை சீண்டும் டிடிவி தினகரன்

கடலில் தூக்கி எரிந்த மர்ம பொருள்

அப்போது அதிக திறன்கொண்ட இன்ஜின் பொருத்தப்பட்ட நாட்டுப்படகு ஒன்று இலங்கை சர்வதேச எல்லையிலிருந்து தமிழகம் நோக்கி வந்து கொண்டிருந்துள்ளது.  இதனை ரேடார் மூலம் அந்தப் படகைக் கண்டறிந்த இந்திய கடற்படையினர் நாட்டுப்படகை பின் தொடர்ந்து விரட்டி சென்றுள்ளனர். அப்போது படகில் இருந்த நபர்கள் ஒரு மூட்டையை நடுக்கடலில் வீசியுள்ளனர். இதனையடுத்து நாட்டுப்படகை துரத்திப்பிட்ட கடற்படையினர் 3பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது  நாட்டுப்படகில் இருந்து தூக்கி வீசியது என்ன பொருள் என கேள்வி எழுப்பினர். இதற்க்கு அந்த நபர்கள் உரிய வகையில் பதில் அளிக்காமல் மழுப்பியுள்ளனர்.

தங்கத்தை மீட்ட கடற்படை

முதலில் எதையும் வீசவில்லையென தெரிவித்தவர்கள், பின்னர் மீன் பிடி வலையை வீசியதாக கூறியுள்ளனர். இதன் காரணமாக சந்தேகம் அடைந்த கடற்படையினர்  ஸ்கூபா டிரைவிங் வீரர்கள் உதவியுடன் இந்திய கடற்படை அதிகாரிகள் நேற்று  முதல் தேடி வந்தனர். நேற்று இரவு நேரம் ஆகிவிட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இதனையடுத்து இன்று காலை மீண்டும் தேடும் பணியை கடற்படையினர் மேற்கொண்டனர்.  அப்போது கடலில் வீசப்பட்ட 12 கிலோ கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு சர்வதேச சந்தையில் 7.5 கோடி என தெரியவந்தது. 

இதையும் படியுங்கள்

ஆவின் பச்சை நிற பால்பாக்கெட் மறைமுகமாக ரூ.2 உயர்வா.? ஏழை மக்களை வாட்டி வதைக்கும் திமுக அரசு- ஓ.பன்னீர் செல்வம்

click me!