பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா பணத்துடன் காதலர்களுடன் ஓடிப்போன மனைவிகள் - ஷாக்கில் கணவர்கள்

By Raghupati R  |  First Published Feb 8, 2023, 10:30 PM IST

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா பணத்தை பெற்றுக்கொண்டு 4 பெண்கள்  காதலர்களுடன் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டம் என்பது நகர்ப்புற ஏழைகளுக்கான வீடு கட்டும் திட்டம், 2015-ம் ஆண்டு ஜுன் மாதம் தொடங்கப்பட்டது ஆகும். 

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் (EWS), மற்றும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் இத்திட்டத்தின் கீழ், அரசு பயனாளிகளின் கணக்குகளுக்கு பணத்தை மாற்றுகிறது. இதன் மூலம் அவர்கள் சொந்தமாக வீடு பெற முடியும்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க..5 - 6 மீட்டர் வரை நகர்ந்த துருக்கி!.. நிலநடுக்கத்தால் அடுத்து நிகழப்போவது என்ன? ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்

குடும்பத்தின் பெண் தலைவி வீட்டின் உரிமையாளராக அல்லது இணை உரிமையாளராக இருப்பதை இத்திட்டம் கட்டாயமாக்கியுள்ளது. இத்திட்டத்தின் பயனாளிகளான நான்கு பெண்களும், இந்த ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி, அவர்களின் கணக்கில் ரூ.50,000 மானியம் வந்தவுடன், அவர்கள் தங்கள் கணவரை விட்டு வெளியேறி உள்ளனர்.

இந்த திட்டத்தின் கீழ் பணத்தை வாங்கிய பலர் வீடு கட்டாமல் இருந்தனர். அவ்வாறு வீடு கட்டாதவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி, உடனே வீடு கட்டும்படி கேட்டுக்கொண்டது. சிலர் தங்களின் மனைவி பெயரில் இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பித்திருந்தனர். குழப்பமடைந்த கணவன்மார்களுக்கு இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை.

பெல்ஹாரா, பாங்கி, ஜைத்பூர் மற்றும் சித்தார் ஆகிய நான்கு பெண் பயனாளிகளின் கணக்குகளுக்கு முதல் தவணை அனுப்பப்பட்டது. இவர்களது வீடுகள் கட்டும் பணி தொடங்காத நிலையில் இந்த வினோத சம்பவம் அதிகாரிகளின் கவனத்துக்கு வந்தது. இதன் பிறகு தான் மீடியாவுக்கு செய்தி வெளியே தெரிந்தது.

பெண்களின் கணவர்கள் இறுதியாக அரசாங்க அலுவலகத்தை அடைந்து அதிகாரிகளிடம் தங்கள் மனைவிகள் தங்கள் காதலர்களுடன் சென்றுவிட்டதாகவும், இந்த திட்டத்தின் இரண்டாவது தவணையை வரவு வைக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர். இந்த பயனாளிகளிடம் பணத்தை எப்படி வசூலிப்பது என தெரியாமல் மாவட்ட அதிகாரிகள் திகைத்து வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இதையும் படிங்க..ஒரு நாளைக்கு 4 கொலை!.. கஞ்சா விற்பனை அமோகம்! முதல்வருக்கு இது தெரியாது - திமுகவை விளாசிய எடப்பாடி பழனிசாமி!

இதையும் படிங்க..ரெட் ஜெயண்ட்.! 100 கோடி பட்ஜெட்! திடீரென திமுக பக்கம் ரூட்டை மாற்றிய காயத்ரி ரகுராம் - நம்ம லிஸ்ட்லயே இல்லையே

click me!