ஹோட்டலில் ரூம் போட்டு அந்த பெண் என்னை கதற கதற பலாத்காரம் செய்தார்.. காவல்நிலையத்தில் கதறிய ஆண்.!

By vinoth kumar  |  First Published Jun 11, 2022, 7:48 AM IST

அந்தப் பெண் என்னை ஓட்டலில் ரூம் போட்டு அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்தார். அதை வீடியோவாகவும் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டி தொடர்ந்து என்னை பாலியல் சித்திரவதை செய்தார் என்று  ஆண் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


அந்தப் பெண் என்னை ஓட்டலில் ரூம் போட்டு அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்தார். அதை வீடியோவாகவும் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டி தொடர்ந்து என்னை பாலியல் சித்திரவதை செய்தார் என்று  ஆண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அரியானா மாநிலம் கர்னல் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய வாலிபர் ஒருவர் செக்டார் 27 காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்த புகாரை கண்டு போலீசாரையே அதிர்ச்சியடைய செய்துள்ளது. கர்னல் பகுதியில் உள்ள ராஜீவ் நகரில் வாடகை வீட்டில் நான் வசித்து வந்தேன். எனக்கு சமூகவலைதளம் மூலம் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

Tap to resize

Latest Videos

இதனையடுத்து, செல்போன் நம்பரை பரிமாறிக் கொண்டோம். கடந்த சில நாட்களுக்கு அந்த பெண் எனக்கு போன் செய்து ஓட்டலுக்கு வரச்சொல்லி இருந்தார். நானும் அந்த பெண் சொன்ன ஓட்டலுக்கு சென்றேன். அங்கு இருவரும் மது குடித்தோம். அப்போது, அந்த ஓட்டலுக்கு வந்த அந்த பெண்ணின் கூட்டாளிகள் என்னை கடுமையாக தாக்கினர்.

பின்னர் அந்த பெண் என்னை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும், இதை வீடியோவாக எடுத்து மிரட்டினர். பின்னர் அந்த ஓட்டலில் தன்னை அடைத்து வைத்து சித்தரவதை செய்ததாகவும் எப்படியோ ஓட்டலில் இருந்து தான் தப்பி வந்து விட்டதாகவும் போலீசில் அந்த ஆண் நபர் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் அங்கு இருந்த சிசிடிவி பதவிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!