
காதலிப்பதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு ஏமாற்றிய காதலன் மீது கல்லூரி விரிவுரையாளர் புகார் கொடுத்துள்ளார். தற்போது அந்தப் பெண் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது. போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். ஆந்திர மாநிலம் ஹைதராபாத் ரசூல் புராவில் இது நடந்துள்ளது.
திரும்பிய பக்கமெல்லாம் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துவருகிறது. இதை தடுக்க காவல் துறையும் அரசும் எத்தனை நடவடிக்கை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை, காதலிப்பதாக கூறி கற்பழித்து கைவிடுவது, காதலிக்க மறுக்கும் பெண்களின் முகத்தில் ஆசிட் வீசுவது, திருமணம் செய்வதாக கூறி கர்ப்பமாக்கி ஏமாற்றுவது, திருமணம் செய்துகொண்டு வரதட்சணை கேட்டு கொடுமை செய்வது போன்ற எண்ணற்ற கொடுமைகள் பெண்களுக்கு எதிராக நடந்து வருகிறது. இந்த வரிசையில் ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம் கல்லூரி விரிவுரையாளரை இளைஞர் கர்ப்பமாக்கியுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஹைதராபாத் திருமலகிரி கிராமம் தர்கா பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கல்லூரி விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 2017ஆம் ஆண்டில் அத்தாப்பூர் கிஷோர் பாக் பகுதியைச் சேர்ந்த நிஹால் சிங் என்பவரை சந்தித்தார். இந்த அறிமுகம் காரணமாக கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி அத்தாபூருக்கு சென்ற நிஹால் சிங் மொட்டை மாடியில் உள்ள தனது அறைக்கு அழைத்துச் சென்று அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்தது அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். அதே நேரத்தில் நிகால் சிங் பலமுறை லாட்ஜிகளுக்கு அழைத்துச் சென்று ரூம் எடுத்து பாலியல் வன்கொடுமை செய்தார். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் அந்தப் பெண் தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என வற்புறுத்தினார். ஆனால் நிஹால் சிங் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்தார்.
இதற்கிடையில் அந்த பெண்ணுக்கு வேறொருவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணத்தை நிறுத்தாவிட்டால் தன்னுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிடுவேன் என அவர் மிரட்டினார். பின்னர் அதை சமூக வலைதளங்களிலும் வெளியிடுவதாக மிரட்டினார் ஆனால் அந்த பெண் அதை பொருட்படுத்தவில்லை, இதானல் அந்தப்பெண்ணின் வருங்கால கணவருக்கு நிஹால் சிங் அதை அனுப்பினார். அதனால் அந்தப் பெண்ணின் திருமணம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த பெண் கர்ப்பமாக இருப்பதும் தெரிந்தது, இதை அறிந்து கடந்த ஜூன் 6ஆம் தேதி தனது தாயுடன் திருமலகிரிக்கு வந்த நிஹால் சிங் திருமணம் செய்துகொள்ள முடியாது என அந்த பெண்ணிடம் கூறினார். நிஹால் சிங்கால் பாதிக்கப்பட்ட பெண் திருமலைகிரி போலீசில் தனக்கு நிஹால் சிங்கால் நேர்ந்த கொடுமை குறித்து புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.