
லிப்ட் கேட்டு இருசக்கர வாகனத்தில் ஏரிய இளம்பெண்ணை நடுகாட்டில் நிறுத்தி இளைஞர்கள் அந்தப் சென்னை பாலியல் வன்புணர்வு செய்துள்ள கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்தப் பெண் பெற்றோர்களிடம் கூறியதை அடுத்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆத்திரம் தாங்காத கிரம மக்கள் அந்த பெண்ணை நாசம் செய்த இளைசர்கள் தீயிட்டு கொளுத்தி கொன்றனர். இச்சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவற்றைக் கட்டுப்படுத்த அரசும், காவல்துறையும் எத்தனையோ நடவடிக்கை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்த வரிசையில் லிப்டு கேட்டு இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணை இளைஞர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள கொடூரம் நடந்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் கும்பலா மாவட்டத்திலுள்ள கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு தனது மகளுடன் சென்ற தந்தை திருமண நிகழ்ச்சி முடித்துவிட்டு தனது மகள்களுடன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தனது சொந்த ஊருக்கு பஸ் வசதி இல்லாததால் அந்த வழியாக வந்தார் தனது கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவரிடம் லிப்டு கேட்டு தனது மகளை வீட்டில் இறக்கிவிடும்படி அனுப்பி வைத்தார்.
அப்போது சரியென்று கூறிய அந்த இளைஞர்கள், அந்த பெண்ணை இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு அழைத்து வந்தனர். ஆனால் பாதி வழியில் அந்த பெண்ணை அடைய வேண்டும் என திட்டமிட்டனர். அதனால் ஆள் அரவம் இல்லாத இடத்தில் வாகனத்தை நிறுத்தி அந்த இளைஞர் அந்த பெண்ணை புதருக்குள் இழுத்துச் சென்று கதற கதற பாலியல் பலாத்காரம் செய்தார். இருவரும் அந்த பெண்ணை பாலியல் இச்சை அடங்கும் வரை வன்புணர்வு செய்தனர். பின்னர் வீட்டுக்கு வந்த அந்த பெண் நடந்த கொடுமை குறித்து தனது பெற்றோர்களிடம் கண்ணீர் மல்க கூறினார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் இந்த கொடுமை குறித்து ஊர் பெரியவர்களிடம் முறையிட்டனர்.
அதை கேட்டு ஆத்திரமடைந்த கிராம மக்கள் அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர்களை பிடித்து சரமாரியாக தாக்கினர், குற்றம் சாட்டப்பட்டவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.