திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்தது. இதற்காக சிகிச்சைகள் மேற்கொண்ட நிலையில் ஜீவிதா கடந்த 38 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது.
திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பின் பிறந்த பச்சிளம் ஆண் குழந்தையை தாயே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவராஜ்(30). இவரது மனைவி ஜீவிதா (26). அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்தது. இதற்காக சிகிச்சைகள் மேற்கொண்ட நிலையில் ஜீவிதா கடந்த 38 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. இதனால் தாய் வீட்டில் வசித்து வந்தார்.
இதையும் படிங்க;- சென்னையில் மஜாவாக நடந்த விபச்சாரம்.. கல்லா கட்டிய பிஸ்னஸ்க்கு ஆப்பு.. அரைகுறை ஆடைகளுடன் சிக்கிய பெண்கள்..!
இந்நிலையில், வீட்டில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் கழுத்தில் இருந்து திடீரென ரத்தம் வருவதாக நேற்று மாலை ஜீவிதா அலறி கூச்சலிட்டுள்ளார். இதனையடுத்து, அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் குழந்தையை தூக்கிக்கொண்டு வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையை வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
குழந்தையின் கழுத்தில் இருந்த கொப்பளங்கள் வெடித்ததால் இறந்திருக்கலாம் என்று ஜீவிதா கூறினார். ஆனால், அவரது பேச்சில் சந்தேகமடைந்த மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜூவிதாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது கொப்புளங்கள் குழந்தையின் கழுத்தில் அதிகம் இருந்ததாகவும், அதனால் தூங்காமல் தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில், குழந்தையின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்ததாகவும் ஜீவிதா கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- ஆசைவார்த்தை கூறி நினைக்கும் போதெல்லாம் இளம்பெண்ணுடன் உல்லாசம்! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய இளைஞர்
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து ஜீவிதாவை கைது செய்தனர். திருமணமாகி 8 ஆண்டுக்கு பின் பிறந்த பச்சிளங்குழந்தையை தாயே கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.