நடத்தையில் சந்தேகம்; நடுரோட்டில் மனைவியை சரமாரியாக குத்தி கொன்ற கணவன்

By Velmurugan s  |  First Published Jan 24, 2023, 10:53 AM IST

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மனைவியின் நடத்தையில் தொடர்ந்து சந்தேகமடைந்து வந்த குடிகார கணவர் நேற்று தனது மனைவியை நடுரோட்டில் கத்தியால் சரமாரியாகக் குத்தி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அழிஞ்சிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசங்கர். கட்டிட தொழிலாளியான இவருக்கு புனிதா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். புனிதா அருகில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்தார். ஜெயசங்கர் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து புனிதாவின் நடத்தையில் சந்தேகம் உள்ளதாகக் கூறி சண்டையிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் பிறந்த குழந்தைக்கு எலும்பு முறிவு: உறவினர்கள் குற்றச்சாட்டு

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில், நேற்று மாலை புனிதா பணி முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அழிஞ்சிக்குப்பம் பேருந்து நிலையம் அருகே வந்துகொண்டிருந்தபோது அவரை வழிமறித்த ஜெய்சங்கர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடினார்.

உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் புனிதாவை மீட்டு ஆம்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி புனிதா பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மேல்பட்டி காவல் துறையினர் தப்பி ஓடிய ஜெய்சங்கரை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருச்சியில் சென்சார் கதவை உடைத்து 2.5 கிலோ தங்கத்தை திருடிய டிஜிட்டல் கொள்ளையர்கள்

மாலை நேரத்தில் ஆள் நடமாட்டம் அதிகம் நிறைந்த பகுதியில் பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!