ஓவரா பேசினாங்க... கொன்னுட்டேன்! தாயின் உடலை சூட்கேசில் எடுத்து வந்து சரணடைந்த பெண்!

Published : Jun 13, 2023, 03:48 PM ISTUpdated : Jun 14, 2023, 12:26 PM IST
ஓவரா பேசினாங்க... கொன்னுட்டேன்! தாயின் உடலை சூட்கேசில் எடுத்து வந்து சரணடைந்த பெண்!

சுருக்கம்

பட்டப்பகலில் ஒரு பெண் தன் சொந்தத் தாயையே கொன்று சூட்கேசிஸ் அடைத்து எடுத்துச் சென்று போலீஸ் ஸ்டேஷனுக்குப் போன சம்பவம் பெரும் பெங்களூருவில் நடந்துள்ளது.

பெங்களூருவில் திங்கள்கிழமை பெண் ஒருவர் ஒரு சூட்கேஸுடன் காவல் நிலையத்திற்குள் சென்று, தன் தாயைக் கொன்று உடலை எடுத்து வந்திருப்பதாகக் கூறி சரண் அடைந்ததுள்ளார். மதியம் 1 மணி அளவில் அந்தப் பெண் காவல் நிலையத்திற்கு வந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்தாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அந்தப் பெண் பெங்களூரில் பிசியோதெரபிஸ்ட்டாக பணியாற்றி வருகிறார். அவர் கொண்டுவந்த சூட்கேஸில் கொலை செய்யப்பட்ட அவரது தாயின் உடலும், தந்தையின் பிரேம் செய்யப்பட்ட படமும் காணப்பட்டதாகவும் காவல்துறையினர் சொல்கின்றனர்.

போராடி கணவரை ஜாமீனில் மீட்ட மனைவி! வெளியே வந்த 15 நாளில் சந்தேகப்பட்டு சுட்டுக்கொன்ற கணவர்!

இந்தச் சம்பவம் மைக்கோ லேஅவுட் காவல் நிலையத்தில் நடந்துள்ளது. கொலை செய்த பெண் 30 வயதுக்கு உட்பட்டவர் என்று சொல்லப்படுகிறது. அந்தப் பெண் காவல் நிலையத்தில் சரணடைந்ததும் கைது செய்யப்பட்டார். கணவருடன் வசித்து வருகிறார். தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக ஊட்டிவிட்டு தாயைக் கொன்றதாகவும் அந்தப் பெண் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

குடும்பத்தில் தாய்க்கும் மகளுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்துவந்ததாகவும், ஆத்திரம் அடைந்தது தாயைக் கொல்லும் அளவுக்குத் துணிந்துவிட்டதாகவும் காவல்துறையினரிடம் அந்தப் பெண் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக பெங்களூரு மைக்கோ லேஅவுட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடர்கின்றனர்.

சேரில் உட்கார்ந்தபடியே யோகா பண்ணுங்க! ஊழியர்களின் மன அழுத்தம் போக்க மத்திய அரசு அட்வைஸ்

பரபரப்பான பெங்களூரூ மாநகர் பகுதியில் பட்டப்பகலில் ஒரு பெண் தன் சொந்தத் தாயையே கொன்று சூட்கேசிஸ் அடைத்து எடுத்துச் சென்று போலீஸ் ஸ்டேஷனுக்குப் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!