பெற்ற தாயை கொலை செய்து சூட்கேசில் அடைத்த மகள்... என்ன காரணம் தெரியுமா? போலீசில் அதிர்ச்சி தகவல்.!

By vinoth kumar  |  First Published Jun 13, 2023, 12:08 PM IST

கர்நாடகா மாநிலம் பெங்களூரு மைக்கோ லேஅவுட் காவல் நிலையத்திற்கு நள்ளிரவில் பெண் ஒருவர் சூட்கேசுடன் வந்துள்ளார். இதுதொடர்பாக அந்த பெண்ணிடம் போலீசார் விசாரித்த போது அமைதியாக இருந்துள்ளார். 


பெங்களூருவில் தாயாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்த மகள் பெற்ற தாயை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு சூட்கேசில் அடைத்து வைத்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடகா மாநிலம் பெங்களூரு மைக்கோ லேஅவுட் காவல் நிலையத்திற்கு நள்ளிரவில் பெண் ஒருவர் சூட்கேசுடன் வந்துள்ளார். இதுதொடர்பாக அந்த பெண்ணிடம் போலீசார் விசாரித்த போது அமைதியாக இருந்துள்ளார். பின்னர், சூட்கேஸை திறந்து காட்டியுள்ளார். அதில், 70 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் இருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- நண்பன்னு நம்பி வீட்டுக்குள்ள விட்டா இப்படியாடா பண்ணுவ? மனைவியுடன் உல்லாசம்.. நேரில் பார்த்த கணவர்..!

இதுதொடர்பாக அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். அதில், பெங்களூருவில் உள்ள பிலேகஹல்லி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருவதாகவும், சூட்கேஸில் கொலை செய்யப்பட்டு கிடப்பதும் தன்னுடைய தாய் என்று தெரிவித்துள்ளார். குடும்பத்தில் அடிக்கடி தாய் சண்டையிட்டு, தற்கொலை செய்யப்போவதாக தன்னை மிரட்டி வந்ததால், மனஉளைச்சலுக்கு ஆளானதாக செலிமா சென் தெரிவித்தார். 

இதையும் படிங்க;- அடச்சீ, கருமம் கருமம்! பெற்ற மகளை வைத்து தாய் பண்ற வேலையா இது..!

மீண்டும் தற்கொலை செய்யப்போவதாக மிரட்டியதால், தாய்க்கு தூக்கமாத்திரை கொடுத்து கழுத்தை நெறுக்கி கொலை செய்து சூட்கேசில் அடைத்து எடுத்து வந்ததாக கூறினார். இதனையடுத்து, உயிரிழந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், தாயை கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். 

click me!