குடிச்சிட்டு வந்து எந்நேரமும் ஓயாத டார்ச்சர்.. கடுப்பான கள்ளக்காதலி.. என்ன செய்தார் தெரியுமா?

Published : Jul 28, 2022, 11:10 AM ISTUpdated : Jul 28, 2022, 11:17 AM IST
குடிச்சிட்டு வந்து எந்நேரமும் ஓயாத டார்ச்சர்.. கடுப்பான கள்ளக்காதலி.. என்ன செய்தார் தெரியுமா?

சுருக்கம்

குடித்து விட்டு தகராறு செய்த கள்ளக்காதலனை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொன்ற பெண் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

குடித்து விட்டு தகராறு செய்த கள்ளக்காதலனை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொன்ற பெண் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பாண்டுப் மேற்கு சிவ்நகர் அருகே குராகா சால் பகுதியை சேர்ந்தவர் வினோத் சட்னாம் (38). இவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க;- மசாஜ் சென்டரில் மஜாவாக நடைபெற்ற விபச்சாரம்.. கஸ்டமர் போல் வந்து அலேக்கா தூக்கிய போலீஸ்.! 

முதற்கட்ட விசாரணையில் வினோத் சட்னாம்விற்கு அதே பகுதியை சேர்ந்த பெண் பிஷ்னு பண்டாரி (42) என்பருடன் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. அவரை திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, கள்ளக்காதலியிடம் விசாரணை நடத்தப்பட்டதில் பல அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். வினோத் சட்னாம் குடித்து விட்டு வந்து பிஷ்னு பண்டாரியின் 13 வயது மகன் உள்பட குடும்ப உறுப்பினர்களுடன் தகராறு செய்து வந்ததும், இதனால் ஆத்திரமடைந்த குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து அவரை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்ததாகவும் தெரியவந்தது. 

இதையும் படிங்க;-  அம்மா என்ன நாலு பேரு சேர்ந்து நாசம் செஞ்சுட்டானுங்க.. 10ம் வகுப்பு பள்ளி மாணவியின் நண்பர்களே கூட்டு பலாத்காரம்

இதனை தொடர்ந்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து பிஷ்னு பண்டாரி, அவரது மகள் லஷ்மி கதம் (25), இவரின் கணவர் யோகேஷ் கதம் (25), பிஷ்னு பண்டாரியின் சகோதரர் ராஜேந்திர பண்டாரி (64) மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த ஆட்டோ டிரைவர் சதீஷ் பிரேம்குமார் (46) உள்பட 6 பேரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க;- செத்த பிறகும்.. 75 வயது காமக்கொடூரனை அடையாளம் காட்டிய சிறுமி.. வீடியோ எடுத்தவர்களுக்கும் ஆப்பு..!

PREV
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை