
மாணவியை ஏமாற்றிய பிரைடு ரைஸ் மாஸ்டர்
காதல் என்பது புனிதமானது, உயிருக்கு உயிராக நேசிப்பது என்று இருக்கும் ஆனால் இன்றைய நவீன உலகத்தில் முகம் தெரியாத நபரோடு பழகி தனது வாழ்க்கையை இழக்கும் நிலை பெரும்பாலானோருக்கு ஏற்பட்டு வருகிறது. காதலுக்காக நீண்ட காத்திருப்பது என்ற நிலை மலையேறிவிட்டது. இன்று பார்த்தால் போதும் நாளையே டேட்டிங், அவுட்டிங் என நவீன உலகம் மாறி விட்டது. அப்படி சமூக வலை தளத்தில் பழகிய ஒருவரை நம்பி சென்ற மாணவிக்கு பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காணவில்லை என்று மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். இந்நிலையில் மதுரை தல்லாகுளம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மாணவியின் செல்போனை ஆய்வு செய்ததில் அவர் ஷேர் சாட் செயலி மூலம் சரண்ராஜ் என்பவரிடம் பேசி பழகி வந்தது தெரியவந்துள்ளது.
போலீஸ் வேலை கிடைத்ததும் காதல் கணவனை கழற்றிவிட்ட மனைவி.. திருமணம் செல்லாது என கூறி அதிர்ச்சி.
செத்த பிறகும்.. 75 வயது காமக்கொடூரனை அடையாளம் காட்டிய சிறுமி.. வீடியோ எடுத்தவர்களுக்கும் ஆப்பு..!
திருமணம் செய்வதாக மாணவி ஏமாற்றம்
இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த சரண்ராஜ் என்பவருடன் மாணவி சென்றிருப்பது தெரியவந்துள்ளது. காவல்துறையினர் சரண்ராஜ் மற்றும் மாணவி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவர்களை மதுரைக்கு அழைத்து வந்தனர். இதனையடுத்து விசாரணை நடத்தியதில் சரண்ராஜ்க்கு முன்பே திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. மேலும் அவர் பிரைட் ரைஸ் மாஸ்டராக கடையில் பணி பணிபுரிந்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது. ஆனால் மாணவியிடம் கல்லூரி மாணவர் என்று கூறி மாணவியிடம் ஏமாற்றி பேசியுள்ளார். மேலும் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாகவும் இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் மாணவி அளித்த புகாரின் பேரில் சரண்ராஜை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். திருமணம் ஆன நபர் பள்ளி மாணவியை ஏமாற்றிய சம்பவம் மதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்