போலீஸ் வேலை கிடைத்ததும் காதல் கணவனை கழற்றிவிட்ட மனைவி.. திருமணம் செல்லாது என கூறி அதிர்ச்சி.

Published : Jul 27, 2022, 09:14 PM ISTUpdated : Jul 27, 2022, 09:20 PM IST
போலீஸ் வேலை கிடைத்ததும் காதல் கணவனை கழற்றிவிட்ட மனைவி.. திருமணம் செல்லாது என கூறி அதிர்ச்சி.

சுருக்கம்

போலீஸ் வேலை கிடைத்தவுடன் காதல் கணவனை மனைவி கழட்டி விட்ட சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில் மனைவியுடன் தன்னை சேர்த்து வைக்க வேண்டும் என கணவர் காவல் துறையில் புகார் கொடுத்துள்ளார். 

போலீஸ் வேலை கிடைத்தவுடன் காதல் கணவனை மனைவி கழட்டி விட்ட சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில் மனைவியுடன் தன்னை சேர்த்து வைக்க வேண்டும் என கணவர் காவல் துறையில் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் பீகார் மாநிலத்தில் நடந்துள்ளது.

ஒருவர் வாழ்க்கையில் பணம், பதவி வந்துவிட்டால் அவர்கள் பழையதை மறந்து விடுவார்கள் என்பது எதார்த்த மொழி, ஆனால் இங்கு ஒரு பெண் பதவி கிடைத்தவுடன் தொட்டுத் தாலி கட்டிய கணவனையே தூக்கி எறிந்துள்ள சம்பவம் நடந்துள்ளது. பீகார் மாநிலத்தில் காதலித்த மனைவியை கடன் உடன்பட்டு கணவர் போலீஸ் வேலையில் சேர்த்த நிலையில் அந்த மனைவி வேலை கிடைத்தவுடன் கணவரை பிரிந்துள்ளார். 

முழு விவரம் பின்வருமாறு:-  பீகார் மாநிலம் மாதேபுரா மாவட்டத்திலுள்ள கேதர் காட் கிராமத்தை சேர்ந்தவர் மிதுன், இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஹர்ப்ரீட் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார், இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் சஹர்சாவில் உள்ள  மாதேஸ்வர் தாம் கோவிலில் திருமணம் நடந்தது. திருமணமான சில மாதங்கள் வரை மகிழ்ச்சியாகவே இருந்தனர். இந்நிலையில் ஹர்ப்ரீத் தீவிரமாக போலீஸ் வேலைக்கு முயற்சித்து வந்தார். இந்நிலையில் லட்சக் கணக்கில் பணத்தை செலவு செய்து மிதுன் மனைவி ஹர்ப்ரீத்துக்கு உதவி வந்தார்.

இதையும் படியுங்கள்: அடத்தூ கருமம்... 8 வகுப்பு மாணவனுடன் எதிர் வீட்டு ஆன்ட்டி செய்த அசிங்கம்.. ஊரைவிட்டே ஓடி தலைமறைவு.

திருமணமான ஒரு சில மாதங்களில் பீகார் காவல்துறையில் ஹர்ப்ரீத்துக்கு போலீஸ் வேலை கிடைத்தது. அவரது மனைவி காவல் துறை பயிற்சிக்கு சென்றார், பயிற்சி முடித்து அவர் காவல் நிலையத்தில் பணி அமர்த்தப்பட்டார். இந்நிலையில் மனைவியை சந்திக்க கணவர் மிதுன் சமஸ்த்திப்பூர் சென்றார், ஆனால் ஹர்ப்ரீத்  கணவரை கண்டுகொள்ளவே இல்லை, நீங்கள் யார் எதற்காக இங்கு வந்தீர்கள் என்று கேட்டதாக தெரிகிறது,. அதுமட்டுமின்றி  இருவருக்கும் இடையே நடந்த திருமணம் செல்லாது என்றும் இனி இதுபோன்று பார்க்க வரவேண்டாம் என கூறிவிட்டார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கணவர் மிதுன் தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் அவர், தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்டதுடன் மனைவி ஹர்ப்ரீத்துக்கு தான் இதுவரை 14 முதல் 15 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதாகவும், அதன்மூலம் ஆவருக்கு போலீஸ் வேலை கிடைத்துள்ளது என்றும், தற்போது அரசு வேலை வந்தவுடன் தன்னை அவர் தூக்கி எறிந்துவிட்டார் என்றும் வேதனைபட கூறியுள்ளார். 

இதையும் படியுங்கள்:  53 வயது வெளிநாட்டுப் பெண்மீது ஆசை.. தனியாக வீடு எடுத்து பலமுறை உல்லாசம்.. வெறி தீர்ந்ததும் அவன் செய்த காரியம்

தன் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தற்போது ஹர்ப்ரீத்  சமஸ்திப்பூர் மாவட்டத்திலுள்ள படவுரி  காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

PREV
click me!

Recommended Stories

திருமணமான 3 மாதத்தில் நிகிலா.. தடுக்க வந்த அண்ணன்.. இருவரின் கதையை முடித்ததும் வேறு வழியில்லாமல் தந்தை மகன் எடுத்த முடிவு
அதிமுக நகர இளைஞரணி இணைச் செயலாளரை தட்டித்தூக்கிய போலீஸ்.. வெளியான அதிர்ச்சி காரணம்!