திமுக பிரமுகர் கொடூர கொலை.. உடலை சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றுக்குள் வீச்சு.. மதுரையில் பதற்றம்..!

Published : Jul 28, 2022, 07:32 AM ISTUpdated : Jul 28, 2022, 07:34 AM IST
திமுக பிரமுகர் கொடூர கொலை.. உடலை சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றுக்குள் வீச்சு.. மதுரையில் பதற்றம்..!

சுருக்கம்

திமுக பிரமுகரை கொடூரமாக கொலை செய்து உடலை சாக்கு மூட்டைக்குள் கட்டி கிணற்றுக்குள் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக பிரமுகரை கொடூரமாக கொலை செய்து உடலை சாக்கு மூட்டைக்குள் கட்டி கிணற்றுக்குள் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள எம்.சுப்புலாபுரத்தை சேர்ந்தவர் வெங்கடாஜலபதி. இவரது மகன் பாலாஜி (25). திமுக பிரமுகரான இவர் பணம் கொடுக்கல், வாங்கல் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு தர்ஷினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 2 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில், கடந்த 24-ம் தேதி வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். ஆனால்,  நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால், பதறிப்போன குடும்பத்தினர் அவரது செல்போனை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இதையும் படிங்க;- 2 வருடம் காத்திருந்து அண்ணனை கொன்றவரை ஸ்கெட்ச் போட்டு பழிதீர்த்த தம்பி.. கடலூரில் பயங்கரம்..!

இதனிடையே, காட்டுப்பகுதிக்கு இளைஞர்கள் சிலர் முயல்வேட்டைக்குச் சென்றபோது, சாமிராஜ் என்பரின் தோட்டத்து கிணற்றுக்குள் கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் மிதப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் உடலை மீட்டனர். அப்போது மாயமான திமுக பிரமுகர் பாலாஜி என்பது உறுதி செய்யப்பட்டது. அவரது கைகள் பின்பக்கமாக வைத்து கட்டப்பட்டு, சாக்கு மூட்டையில் வைத்து உடலை கிணற்றில் வீசி சென்றுள்ளனர். அடையாளம் தெரியாமல் உடல் அழுகும் வகையில் சாக்கு மூட்டையை இணைத்து 40 கிலோ கல் கட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது. 

இதையும் படிங்க;- செத்த பிறகும்.. 75 வயது காமக்கொடூரனை அடையாளம் காட்டிய சிறுமி.. வீடியோ எடுத்தவர்களுக்கும் ஆப்பு..!

இதனையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். கட்சி முன்விரோதத்தில் பாலாஜி கொலை செய்யப்பட்டாரா? அல்லது பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனையா?  அல்லது பெண் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணையில் இறங்கியுள்ளனர். திமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க;-  தலையணையுடன் உடலுறவு, சக மாணவிகள் பற்றி ஆபாசம்.. அதிர வைக்கும் ராகிங் கொடுமை.. வெளியான பகீர்.!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி கொலைக்கான பின்னணி.. எதிர்பாராத ட்விஸ்ட்.. போலீஸ் அதிர்ச்சி.!
முதலிரவில் அதிர்ச்சி.. திருமணமான 3 நாளில் விவாகரத்து கேட்ட புதுப்பெண்! நடந்தது என்ன?