ஆசை வார்த்தை கூறி பலமுறை பலாத்காரம்.. காதலன் வீட்டு வாசலில் நின்று கதறிய பெண் சாப்ட்வேர் இன்ஜினியர்..!

Published : Jul 13, 2021, 05:52 PM IST
ஆசை வார்த்தை கூறி பலமுறை பலாத்காரம்.. காதலன் வீட்டு வாசலில் நின்று கதறிய பெண் சாப்ட்வேர் இன்ஜினியர்..!

சுருக்கம்

கோகுல் கல்லூரியிலிருந்து விலகி வாணியம்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ சேர்ந்தார். தொடர்ந்து இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கோகுல் பெண் என்ஜினீயரை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை பலாத்காரம் செய்துள்ளார்.

திருப்பத்தூரில் ஆசை வார்த்தை கூறி பெண் என்ஜினீயங் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அவரது காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பெத்தூர் கிராமத்தை சேர்ந்த 23 வயது பெண் என்ஜினீயர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரும் ஜோலார்பேட்டை எஸ்.கோடியூர் கிராமத்தை சேர்ந்த கோகுல் (24) என்பவரும் வாணியம்பாடி தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் ஒன்றாக படிக்கும்போது காதலித்து வந்துள்ளனர்.

பின்னர் கோகுல் கல்லூரியிலிருந்து விலகி வாணியம்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ சேர்ந்தார். தொடர்ந்து இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.கோகுல் பெண் என்ஜினீயரை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில், கோகுலிடம் சென்று திருமணம் செய்துகொள்ள பெண் என்ஜினீயர் கூறினார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். 

இந்நிலையில் பெண் என்ஜினீயர் கோகுல் வீட்டிற்குச் சென்று நடந்ததைக் கூறி நியாயம் கேட்டுள்ளார். ஆனால், கோகுலின் தந்தை திருகுமரன் (50), அவரது மனைவி செல்வி (50), ஆகியோர் எங்கள் வீட்டிற்கு வரக்கூடாது கூறி மிரட்டியுள்ளனர். மேலும், அவரது நண்பர்களும் மிரட்டியுள்ளனர். இதுகுறித்து பெண் என்ஜினீயர் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, கோகுலை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

அடச்சீ.. இப்படி ஒரு தாயா? 31 வயது கள்ளக்காதலனுக்கு 18 வயது மகளை திருமணம் செய்து வைத்த கொடூரம்
பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி.. காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. கணவன் கண்முன்னே அலறிய மனைவி..