மயிலாடுதுறை மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் ஆன்லைன் மோசடிகளில் இருந்து விழிப்புடன் இருப்பது குறித்து சைபர் கிரைம் விழிப்புணர்வு வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்.
மயிலாடுதுறை மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் அஸ்வினி சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, பொதுமக்களிடையே விழிப்புணர்வு இல்லாததால் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து இருப்பதாகவும், பெரும்பாலும் வேலையில்லாமல் உள்ள இளைஞர்களை குறி வைத்து பிரபல நிறுவனங்களின் பெயரில் வேலை வாங்கி தருவதாக கூறி இணைய வழியில் பணம் பெற்று மோசடி செய்து செய்து ஏமாற்றுவதாகவும், எனவே இளைஞர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஓடிபி அல்லது பின் எண்களை கேட்டு வங்கி கணக்கில் உள்ள அனைத்து பணத்தையும் திருடும் மோசடி கும்பல்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து வரும் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம். மேலும் நெருங்கிய நண்பர்களின் புகைப்படத்தை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் மெசேஜ் செய்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
திருப்பத்தூரில் சிறுமி உயிரிழந்த விவகாரம்; முதல்வன் அர்ஜூன் பாணியில் ஆட்சியர் அதிரடி ஆய்வு
எனவே தங்களது சுய விவரங்களை யாரிடமும் பகிர வேண்டாம். மேலும் நமது சுய விவரங்கள் திருடக்கூடிய வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் சமூக வலைதளங்களை கையாள வேண்டும். இது குறித்த புகார்களுக்கு 1930 என்கின்ற உதவி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். முகம் தெரியாதவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி பொதுமக்கள் சேமித்து வைத்த ஒட்டுமொத்த பணத்தையும் இழக்க வேண்டாம் என அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D