வாச்சாத்தி பாலியல் பலாத்கார வழக்கு.. 215 பேரின் தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.!

Published : Sep 29, 2023, 10:55 AM ISTUpdated : Sep 29, 2023, 11:17 AM IST
வாச்சாத்தி பாலியல் பலாத்கார வழக்கு..  215 பேரின் தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.!

சுருக்கம்

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்துள்ள வாச்சாத்தி மலைகிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறி, 1992ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதி வனத்துறையினர், காவலர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். 

வாச்சாத்தி பாலியல் பலாத்கார வழக்கில் 2011ம் ஆண்டு தருமபுரி மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்துள்ள வாச்சாத்தி மலைகிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறி, 1992ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதி வனத்துறையினர், காவலர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கிராமத்தில் இருந்த இளம்பெண்கள் 18 பேரை  பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையும் படிங்க;- 3 மணிநேரத்தில் இந்த 6 மாவட்டங்களில் புரட்டி எடுக்கப்போகுதாம் மழை.. வானிலை மையம் வார்னிங்..!

இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணையில்  4 ஐஎப்எஸ் அதிகாரிகள் 124 வனத்துறையினர், காவல்துறையினர், வருவாய் துறையினர் என 269 பேர் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி குற்றம்சாட்டப்பட்ட 269 பேரில் விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துவிட்டனர். இதனால்,  215 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 ஐஎப்எஸ் அதிகாரிகள் உள்பட 17 வனத்துறையினரில் 12 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு ஓராண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள்  சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கை நீதிபதி வேல்முருகன் விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார். 

இதையும் படிங்க;- 200க்கும் மேற்பட்ட வழக்கு.. பாஜகவில் இணைந்த பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யா.. வழங்கப்பட்ட மாநில பதவி!

அதில், வாச்சாத்தி மலைக் கிராம மக்கள் மீதான வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில், 215 பேர் குற்றவாளிகள் என தருமபுரி மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை  சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு உடனடியாக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் இறந்து விட்டால் அவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். குற்றம் புரிந்தவர்களிடம் ரூ.5 லட்சம் வசூலிக்க வேண்டும். மேலும், அப்போதைய எஸ்.பி, மாவட்ட ஆட்சியர், வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட அல்லது அவர்களது குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என நீதிபதி வேல்முருகன் கூறியுள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!