அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரி தன் மனைவியுடன் வசித்து வந்துள்ளார். அப்போது, 16 வயது சிறுமி வேலைக்கு அமர்த்தியுள்ளார். இன்று முதலே சிறுமிக்கு சாப்பாடு கூட கொடுக்காமல் தொடர்ந்து தம்பதி சித்ரவதை செய்து வந்துள்ளனர்.
ராணுவ அதிகாரியும், அவரது மனைவியும் சேர்ந்து 16 வயது சிறுமியை வீட்டு வேலைக்கு அழைத்துச் சென்று கொடூரமாக சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரி தன் மனைவியுடன் வசித்து வந்துள்ளார். அப்போது, 16 வயது சிறுமி வேலைக்கு அமர்த்தியுள்ளார். இன்று முதலே சிறுமிக்கு சாப்பாடு கூட கொடுக்காமல் தொடர்ந்து தம்பதி சித்ரவதை செய்து வந்துள்ளனர். அந்த சிறுமியின் பற்களை உடைத்தும், நாக்கில் கத்தியால் குத்தியும் கொடுமைப்படுத்தி உள்ளனர். அதோடு இல்லாமல், சிறுமி உணவு கேட்டும்போது, குப்பை தொட்டியில் இருந்து சாப்பிட சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க;- கார்ல கடத்தி என்ன மூணு பேரும் நாச செஞ்சுட்டாங்க.. தாயிடம் கதறிய மகள்.. இறுதியில் நடந்தது என்ன?
மேலும், உடைகளை அவிழ்த்து கொடூரமாக தாக்கி காயப்படுத்தி வந்துள்ளனர். 6 மாதங்களாக தொடர் சித்ரவதை அனுபவித்து வந்த சிறுமி ஒரு வழியாக அவர்களிடம் இருந்து தப்பித்து பெற்றோரிடம் வந்து தஞ்சமடைந்தார். பின்னர், நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையும் படிங்க;- திமுக கவுன்சிலர் கொலையில் திடீர் திருப்பம்.. கைதான தம்பதி.. இதற்காகத் தான் கொலை செய்தோம்.! பகீர் தகவல்.!
இந்த புகார் தொடர்பாக போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ராணுவ அதிகாரி மற்றும் அவரது மனைவியையும் கைது செய்தனர். படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.