கள்ளக்காதல் ஜோடி செய்த காரியம்.. நேரில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி..!

By vinoth kumar  |  First Published Sep 27, 2023, 12:55 PM IST

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள புதுப்பாளையம் காட்டு பகுதியில் ஒரு ஆண், பெண் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு சடலமாக தொங்குவதை அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.


கள்ளக்காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவந்ததை அடுத்து  கள்ளக்காதல் ஜோடி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள புதுப்பாளையம் காட்டு பகுதியில் ஒரு ஆண், பெண் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு சடலமாக தொங்குவதை அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அழுகிய நிலையில் கிடந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- ராங்காலால் ராங் ரூட்டில் போன மனைவி! எவ்வளவு சொல்லியும் கேட்காமல் உல்லாசம்.. இறுதியில் கணவர் செய்த பயங்கரம்.!

சடலமாக தொங்கியவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. விசாரணையில் தூக்கில் தொங்கிய பெண் பொன்முடியை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரின் மனைவி கலைச்செல்வி (33) என்பதும், அதே ஊரைச் சேர்ந்த தீபன்ராஜ் (25) என்பதும் தெரியவந்தது. கலைச்செல்விக்கும், தீபன்ராஜூக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி தனிமையில் இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

இதையும் படிங்க;- பள்ளி மாணவி துடிதுடிக்க கொடூர கொலை.. தனியார் ஊழியர் கைது.. நடந்தது என்ன? பகீர் தகவல்..!

இந்நிலையில் இவர்களது கள்ளக்காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவந்ததை அடுத்து அவமானம் தாங்காமல் கள்ளக்காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி புதுப்பாளையம் காட்டுப்பகுதிக்கு சென்று மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!