சென்னை வண்டலூரை அடுத்த ஆதனூர் டி.டி.சி நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ் (25). இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.
பிரபல ரவுடி வீடு புகுந்து தலை சிதைக்கப்பட்டு கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வண்டலூரை அடுத்த ஆதனூர் டி.டி.சி நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ் (25). இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், மோகன்ராஜ் வீட்டில் தனியாக இருந்த போது யாருக்கும் தெரியாமல் வீடு புகுந்த மர்ம கும்பல் தலை சிதைக்கப்பட்டு சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளனர்.
இதையும் படிங்க;- பள்ளி மாணவி துடிதுடிக்க கொடூர கொலை.. தனியார் ஊழியர் கைது.. நடந்தது என்ன? பகீர் தகவல்..!
இதனிடையே, மோகன்ராஜ் தங்கி இருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உள்ளே சென்று பார்த்த போது மோகன்ராஜ் கொடூராமாக வெட்டி கொலை செய்யப்பட்டு ரத்தம் முழுவதும் காய்ந்து இருந்தது. இதனையடுத்து மோகன்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க;- 10ஆம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம் செய்து கொலை; கிணற்றில் வீசப்பட்ட உடல் மீட்பு
இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இரண்டு நாட்களுக்கு முன்பே இந்த கொலை நடைபெற்றிக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். பழிக்குப் பழியாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.