திமுகவை சேர்ந்த பேரூராட்சி பெண் கவுன்சிலர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் அருகே காட்டுப்பகுதியில் திமுகவை சேர்ந்த பேரூராட்சி பெண் கவுன்சிலர் கொலை செய்யப்பட்டு அரை நிர்வாணத்துடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி அடுத்த சோழ காளிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரூபா (42). இவரது கணவர் தங்கராசு கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார். ரூபா ஈரோடு மாவட்டம், சென்ன சமுத்திரம் பேரூராட்சி வார்டு கவுன்சிலராக (திமுக) உள்ளார். இவர் கரூர் மாநகரப் பகுதியில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று வழக்கம்போல் வீட்டிலிருந்து புறப்பட்டு, கரூர் வந்த அவர் இரவு வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று மதியம் கரூர் மாவட்டம், பவுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட பாலமலை முருகன் கோவில் அருகில் உள்ள காட்டுப்பகுதி ஒன்றில் தலை நசுங்கிய நிலையில், அரை நிர்வாணமாக ரூபா சடலமாக கிடந்துள்ளார்.
தகவல் அறிந்த க.பரமத்தி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரூபாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கொலை செய்த நபர் யார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூரில் பயங்கரம்... பிரபல ரவுடி வீடு புகுந்து தலை சிதைக்கப்பட்டு கொடூர கொலை!