திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன். கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஆட்டை திருடிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிய 3 பேரை இரவு ரோந்து பணியில் இருந்த எஸ்ஐ பூமிநாதன், சித்திரவேலு ஆகியோர் விரட்டிச் சென்றனர்.
ஆடு திருடர்களால் எஸ்.ஐ. பூமிநாதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் புதுக்கோட்டை நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்குகிறது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன். கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஆட்டை திருடிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிய 3 பேரை இரவு ரோந்து பணியில் இருந்த எஸ்ஐ பூமிநாதன், சித்திரவேலு ஆகியோர் விரட்டிச் சென்றனர். அப்போது சித்திரவேலு பின்தங்கினார்.
ஆடு திருட்டு கும்பலை 8 கிலோ மீட்டர் தூரம் சரியாக பின்தொடர்ந்த பூமிநாதன், புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட பள்ளத்துப்பட்டி ரயில்வே சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கி இருந்தது. இதனால் தப்பிக்க முடியாமல் திணறிய ஆடு திருடர்களை பூமிநாதன் பிடித்தார். அப்போது அவர்கள் கத்தியால் குத்தியதில் பூமிநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை கைது செய்தனர். 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மணிகண்டன் சிறையிலும், மற்ற 2 சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கு புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது.