அரசு பெண் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு.. ஒரு தலைக்காதலன் செய்த வெறிச்செயல்.. அதிர்ச்சி சம்பவம்

By Raghupati R  |  First Published Sep 18, 2022, 8:42 PM IST

திருப்பூர் அருகே அரசு பெண் வழக்கறிஞரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூரைச் சேர்ந்த அரசு வழக்கறிஞர் ஜமீலா பானு. இவரது மகள் நிஷா. இவர் சேலம் அரசு சட்டக் கல்லூரியில் பயின்றபோது, அதே கல்லூரியில் பயின்ற ரகுமான்கான் என்பவர் நிஷாவை காதலித்து வந்துள்ளார். மேலும் நிஷாவிடம் தன்னை காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு..இனி தோசை சரியா வரலன்னு கவலைப்படாதீங்க மக்களே.! தோசை பிரிண்டர் வந்தாச்சு - விலை எவ்வளவு தெரியுமா ?

இது தொடர்பாக ஜமீலாபானு சேலத்தில் அளித்த புகாரின் பேரில் சேலம் போலீசார் ரகுமான் கானை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளிவந்துள்ளார் ரகுமான்கான். ஜமீலா பானு வழக்கம் போல தனது மகளுடன் இன்று மதியம் குமரன் சாலையில் உள்ள தனது அலுவலகத்துக்கு வந்துள்ளார். 

தனது மகளுடன் அலுவலகத்தில் இருந்தபோது, அங்கு வந்த 2 பேர் திடீரென ஜமீலாபானு மற்றும் அவரது மகள் நிஷா ஆகிய இருவரையும்  அரிவாளால் வெட்டினர். வெட்டுப்பட்ட இருவரும் சத்தமிடவே, ரகுமான்கான் மற்றும் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

மேலும் செய்திகளுக்கு..வெளிநாட்டில் கணவர்.. 25 வயது வாலிபருடன் ஆட்டம் போட்ட 40 வயது பெண் - வயசு பசங்கள வச்சுக்கிட்டு இப்படியா?

மேலும், அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஜமீலா பானு மற்றும் அவரது மகள்  நிஷா ஆகியோரை மீட்டு  மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  பிரதான சாலையில் பட்டப்பகலில் பெண்கள் இருவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..60 மாணவிகளின் குளியல் வீடியோஸ்.. லீக் செய்த சக மாணவி கைது - ஆபாச தளத்திற்கு விற்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்

click me!