சிவில் தேர்வுக்காக டெல்லி பறந்த மனைவி, இளைஞனுடன் உல்லாசம்.. இரவெல்லாம் கடலை.. கழுத்தை நெறித்து கொலை.

Published : Aug 19, 2022, 09:25 PM ISTUpdated : Aug 19, 2022, 09:37 PM IST
சிவில் தேர்வுக்காக டெல்லி பறந்த மனைவி, இளைஞனுடன் உல்லாசம்.. இரவெல்லாம் கடலை.. கழுத்தை நெறித்து கொலை.

சுருக்கம்

போட்டித் தேர்வுக்கு படிக்கிறேன் என கூறிவிட்டு செல்போனில் கள்ளக்காதலுடன் பல மணி நேரம் உரையாடி வந்த மனைவியை கணவன் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

போட்டித் தேர்வுக்கு படிக்கிறேன் என கூறிவிட்டு செல்போனில் கள்ளக்காதலுடன் பல மணி நேரம் உரையாடி வந்த மனைவியை கணவன் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம்  மடிவாலா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த கொடூரம் நடந்துள்ளது.

முழு விபரம் பின்வருமாறு கர்நாடக மாநிலம் மடிவாளாகாவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் பிரித்திவிராஜ் (48) இவர் கடந்த 13 ஆண்டுகளாக மடிவாளாவில் எலக்ட்ரானிக்கல் பொருட்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார், இவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார், இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஜோதிகுமாரி 38 என்ற பெண்ணுக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணம் நடந்த சில ஆண்டுகள் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றது, ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்தது.  மனைவி ஜோதி குமாரி சிவில் தேர்வுக்கு தயாராகி வந்தார், இந்நிலையில் அவருக்கு இளைஞர் ஒருவருடன் திருமணத்துக்கு புறம்பான உறவு ஏற்பட்டது, அந்த இளைஞனுடன் அடிக்கடி போனில் பேசி வந்தார், இதை கணவர் கேட்கும்போதெல்லாம் படிப்பு சம்பந்தமாக பேசுவதாக கூறி சமாளித்து வந்தார். 

இதையும் படியுங்கள்: பொண்ணுங்கன்னா என்ன ஊறுகாவா? தேவைனா தொட்டுக்க.. கழற்றிவிட்ட காதலனை நாசம் செய்த காதலி.

ஆனால் மனைவி கள்ளக்காதலனுடன் பேசுவது கணவருக்கு தெரிய வந்தது, மனைவி போனில் பேசும் போதெல்லாம் கணவர் பிரித்திவிராஜ் தகராறு செய்து வந்தார். ஒரு கட்டத்தில் மனைவியை தீர்த்து கட்ட முடிவு செய்தார் அவர், இந்த மாதம் 2 தேதி உடுப்பியில் உள்ள மல்பே கடற்கரைக்கு செல்லலாம் என மனைவியை அழைத்துச் சென்றார், முன்னதாக இருவரது செல்போனையும் வீட்டிலேயே வாங்கி வைத்து விட்டார், தனது காரில் மனைவியை அழைத்துச் சென்ற அவர், உடன் தனது நண்பர் சமீர்குமாரையும் அழைத்துச் சென்றார்.

இதையும் படியுங்கள்: காதலனுடன் துபாய் பறந்த மனைவி.. அடிக்கடி வீடியோ கால் செய்து கணவன், குழந்தைகளை கிண்டல் செய்து கொடுமை.

பின்னர் மல்பே கடற்கரைக்கு சென்ற அவர்கள் மனைவியை கடலில் அழுத்தி கொல்லை திட்டமிட்டார், ஆனால் அங்கு கடலுக்குள் செல்ல முடியாததால் அந்த திட்டம் தோல்வியடைந்தது, பின்னர் சக்லேஸ்புராவுக்கு அழைத்துச் சென்றார், அங்கு போகும் வழியில் காரில் வைத்து நண்பருடன் சேர்ந்து மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்தார், உடலை புதருக்குள் வீசி விட்டு அங்கிருந்து தப்பி வந்தனர். பின்னரெ மனைவியை காணவில்லை என கடந்த 5ஆம் தேதி மடிவாளா காவல் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

போலீசார் சிசிடீவி காட்சிகளை ஆராய்ந்தனர். பின்னர் செல்போன் வீட்டில் வைத்துச் சென்றது அறிந்த போலீசார் கணவர் மீது சந்தேகம் அடைந்தனர். பின்னர் அவர்களுக்கு உரிய பாணியில் விசாரித்தனர், மனைவி எப்போதும் கள்ளக் காதலனுடன் போனில் பேசி தன்னை கொடுமைப்படுத்தி வந்ததார் என்றும், இரண்டு முறைகளில் தேர்வு எழுத டெல்லி சென்று அங்கு வாலிபர் ஒருவருடன் அவர் உல்லாசத்தில் ஈடுபட்டு வந்ததார் என்பதையும் போலீசாரிடம் கூறினார். மனைவியின் கள்ளத்தொடர்பால் வெறுப்படைந்து அவரை கழுத்தை நெறித்து கொன்றதையும் அவர் ஒப்புக்கொண்டார், பின்னர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 
 

PREV
click me!

Recommended Stories

கதறிய 9ம் வகுப்பு பள்ளி மாணவன்.. ஓயாமல் 4 பேர் டார்ச்சர்.. கட்டாய ஓரின**சேர்க்கையால் அதிர்ச்சி!
பல்கலைக்கழகத்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 2 மாணவர்கள் பலி.. 8 பேர் படுகாயம்.. பரபரப்பு!