பொண்ணுங்கன்னா என்ன ஊறுகாவா? தேவைனா தொட்டுக்க.. கழற்றிவிட்ட காதலனை நாசம் செய்த காதலி.

By Ezhilarasan Babu  |  First Published Aug 19, 2022, 9:02 PM IST

காதலித்த பெண்ணை ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்யவிருந்த இளைஞனை பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தினருடன் வந்து திருமணத்தை நிறுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


காதலித்த பெண்ணை ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்யவிருந்த இளைஞனை பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தினருடன் வந்து திருமணத்தை நிறுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் இது அரங்கேறியுள்ளது.

பெண்கள் பல வகைகளில் ஏமாற்றப்படுகின்றனர். காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கி மோசடி செய்யப்படுகின்றனர். சில நேரங்களில் பெண்கள் அவர்களிடம் உள்ள பணத்திற்காக குறிவைக்கப்படுகின்றனர். இது போல இன்னும் எத்தனையோ வகைகளில் பெண்களுக்கு எதிரான மோசடிகள் அரங்கேறி வருகிறது. இந்த வரிசையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம் பெண்ணுடன் ஊர் சுற்றி வந்த சாப்ட்வேர் இன்ஜினியர் அந்தப் பெண்ணை விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சித்துள்ள வழக்கில் சிக்கியுள்ள சம்பவம் நடந்துள்ளது.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்:  சிவில் தேர்வுக்காக டெல்லி பறந்த மனைவி, இளைஞனுடன் உல்லாசம்.. இரவெல்லாம் கடலை.. கழுத்தை நெறித்து கொலை.

முழு விவரம் பின்வருமாறு ஆந்திர மாநிலம் இசுரல்லப் பள்ளியை சேர்ந்தவர் ரமேஷ் இவர் பெங்களூருவில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார், இந்நிலையில் நந்தியால் மாவட்டம் அல்லகட்டாவைச் சேர்ந்த  இளம்பெண் ஒருவர் இசுரல்லப் பள்ளியில் உள்ள தனது உறவுக்காரர்களின் வீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார், அந்த பெண் பார்க்க லட்சணமாக இருந்ததால் ரமேஷின் பார்வை அந்த பெண் மீது திரும்பியது, வாழ்ந்தாள் அந்தப் பெண்ணுடன்தான் வாழ வேண்டும் என முடிவு செய்த அவர் அந்தப்பெண்ணை துரத்தி துரத்தி காதலித்தார்.

இதையும் படியுங்கள்: காதலனுடன் துபாய் பறந்த மனைவி.. அடிக்கடி வீடியோ கால் செய்து கணவன், குழந்தைகளை கிண்டல் செய்து கொடுமை.

நிச்சயம் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்தார். இதனால் அந்தப் பெண்ணும் அவரை காதலிக்க ஒப்புக்கொண்டார். அதையடுத்து அவர்கள் இருவரும் பல இடங்களில் ஊர்சுற்றி உல்லாசம் அனுபவித்து வந்தனர். ஒரு கட்டத்தில் பழக பழக பாலும் புளிக்கும் என்பதுபோல அந்த பெண் மீது ரமேஷ்க்கு சலிப்பு ஏற்பட்டது, வெறொரு புதுப் பெண்ணை திருமணம் செய்து செட்டில் ஆக முடிவு செய்தார். திடீரென காதலித்த பெண்ணுக்கு தெரியாமல் அவசர அவசரமாக திருமண ஏற்பாடுகளை செய்தார்,

பெத்த வடுகூர் மண்டலம் வீரப் பள்ளியை சேர்ந்த வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள நிச்சயக்கப்பட்ட நிலையில், இசுரல்லப் பள்ளியில் உள்ள  ஆனந்தாஸ் திருமண மண்டபத்தில் திருமணம் நடப்பதாக இருந்தது. இந்த விவகாரம் ரமேஷின் காதலிக்கு தெரிய வந்தது. உடனடியாக இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்த அவர் போலீசாரின் துணையுடன் திருமணத்தை நிறுத்தினார்.

போலீசார் ரமேஷை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். இந்நிலையில் ஏற்கனவே காதலித்ததை மறைத்து தங்களையும் ஏமாற்ற முயற்சித்தார் என கூறி மணப்பெண்ணின் பெற்றோர்களும் ரமேஷ் மீது புகார் தெரிவித்தனர். இரு தரப்பின் புகாரையும் பெற்ற போலீசார் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  
 

click me!