காதலனுடன் துபாய் பறந்த மனைவி.. அடிக்கடி வீடியோ கால் செய்து கணவன், குழந்தைகளை கிண்டல் செய்து கொடுமை.

By Ezhilarasan Babu  |  First Published Aug 19, 2022, 8:08 PM IST

கள்ளக்காதலனுடன் ஓடிய பெண் வீடியோ கால் செய்து கணவன் மற்றும் குழந்தைகளை கிண்டல் செய்து வந்த நிலையில் குழந்தைகளுடன் கணவன் தற்கொலை செய்து கொண்டுள்ள துயரச் சம்பவம் நடந்துள்ளது.  கர்நாடக மாநிலம் குண்டூரில் இந்த கொடூரம் அரங்கேறி உள்ளது.


கள்ளக்காதலனுடன் ஓடிய பெண் வீடியோ கால் செய்து கணவன் மற்றும் குழந்தைகளை கிண்டல் செய்து வந்த நிலையில் குழந்தைகளுடன் கணவன் தற்கொலை செய்து கொண்டுள்ள துயரச் சம்பவம் நடந்துள்ளது.  கர்நாடக மாநிலம் குண்டூரில் இந்த கொடூரம் அரங்கேறி உள்ளது.

பெரும்பாலான கொலை தற்கொலைகள் கள்ளக் காதலை மையமாக வைத்தே அரங்கேறி வருகிறது. அதில் கணவன் மனைவிக்கு துரோகம் செய்தால் கூட மனைவி குழந்தைகளுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து அவர்களை வளர்த்து  கரை சேர்த்து தாய்மையை நிரூபித்து வருகின்றனர். ஆனால் இங்கு ஒரு பெண் கள்ளக்காதலுக்காக கணவன் மற்றும் குழந்தைகளை விட்டு வெளிநாடு சென்றது மட்டுமல்லாமல் அடிக்கடி வீடியோ கால் செய்து அவர்களை கிண்டல் செய்து வந்துள்ள கொடூரம் நடந்துள்ளது.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்: பட்டப்பகலில் காவல் நிலையம் எதிரே இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொலை.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்..!

முழு விவரம் பின்வருமாறு கர்நாடக மாநிலம் தும்கூரில் உள்ள பிஎச் காலனியை சேர்ந்தவர் சமியுல்லா (45) இவரது மனைவி சமீரா பானு, இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர், இந்நிலையில்  திருமணத்திற்கு முன்பிருந்தே சமீராவுக்கு இளைஞர் ஒருவருடன் காதல் இருந்து வந்தது. திருமணத்திற்கு பின்னரும் அது தொடர்ந்தது. இந்நிலையில்  சமீரா கள்ளக்காதலனுடன் குழந்தை மற்றும் கணவனை  விட்டு துபாய் சென்றார்.

இதையும் படியுங்கள்: வீட்டுக்கு வந்த மாணவிக்கு கிரேப் ஜூஸ்... கட்டிலில் தூக்கி போட்டு உல்லாசம்.. 3 முறை கரு கலைத்த பேராசிரியர்.

மனைவி குழந்தைகளை விட்டு கள்ளக் காதலனுடன் ஓடியதால் கணவர் சமியுல்லா கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். ஆனாலுப் இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனை அவர் தனியாக வீடு எடுத்து வளர்த்து வந்தார். இந்நிலையில் மனைவி சமீரா பானு அடிக்கடி தனது குழந்தைகளுக்கு வீடியோ கால் செய்து அவர்களை இழிவாக பேசுவது, திட்டுவது, கேலி கிண்டல் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இது கணவர் சமீயுல்லாவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. வியாழக்கிழமை காலை தனது குழந்தைகளுக்கு பூச்சி மருந்தை குடிக்க கொடுத்த அவர் தானும் குடித்தார்.

சிறிது நேரத்தில் சமியுல்லா துடிதுடித்து உயிரிழந்தார். அங்கு குழந்தைகள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர், இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர், பின்னர் ஆம்புலன்ஸ் உதவியுடன் குழந்தைகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர், பெங்களூரு விக்டோரியா மருத்துவமனைக்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளனர், அவர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. ஒரு தாய் கள்ளக்காதலனுடன் ஓடியது மட்டுமல்லாமல் குழந்தைகளை வீடியோ காலில் கிண்டல் செய்து வந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

click me!