கணவரை காணவில்லை.. சினிமா பாணியில் களமிறங்கிய மனைவி.. அப்படி என்ன செய்தார்..?

Published : Apr 24, 2022, 04:41 PM ISTUpdated : Apr 24, 2022, 04:44 PM IST
கணவரை காணவில்லை.. சினிமா பாணியில் களமிறங்கிய மனைவி.. அப்படி என்ன செய்தார்..?

சுருக்கம்

சேலம் அருகே காணாமல் போன கணவரை, மனைவி தனது 16 வயது மகனுடன் , ஆட்டோ ஒன்றை வாடகை எடுத்து, ஒலிபெருக்கி மூலமும் துண்டு பிரசுரங்கள் வழங்கியும் கிராம கிராமமாக சென்று தேடி வருகிறார்.  

சேலம் அருகே காணாமல் போன கணவரை, மனைவி தனது 16 வயது மகனுடன் , ஆட்டோ ஒன்றை வாடகை எடுத்து, ஒலிபெருக்கி மூலமும் துண்டு பிரசுரங்கள் வழங்கியும் கிராம கிராமமாக சென்று தேடி வருகிறார்.சேலம்‌ மாவட்டம்‌, வாழப்பாடி அருகே முத்தம்பட்டி கிராமத்தில் வசிக்கும் சிவராமன். இவரது மனைவி பழனியம்மாள். இவருக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர். இவர்  வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்களுக்கு விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுக்கும் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் சிவராமன் கடந்த 7 ஆம் தேதி வீட்டிலிருந்து வேலை நிமித்தமாக வாழப்பாடி செல்வதாக கூறிக்கொண்டு சென்றுள்ளார்.ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அவரது நண்பர் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் எங்கும் இல்லை. இந்நிலையில் அதிர்ச்சியடைந்த அவர் மனைவி, வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின்‌ பேரில்‌ வழக்குப்பதிவு செய்த போலீசார், காணாமல் போன சிவராமனைஇ தீவிரமாக தேடி வருகின்றனர்‌. ஆனால் கணவர் காணமால் போகி 19 நாட்கள் கடந்த நிலையில் இதுவரை எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் காணாமல் போன கணவரை தேட மனைவி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதாவது ஆட்டோ ஒன்றை வாடகைக்கு எடுத்து ஒலிபெருக்கி மூலமாக சுற்றுவட்டார கிராமங்களுக்கு சென்று தனது கணவன் குறித்து கேட்டறிந்து , தேடி வருகிறார். குறிப்பாக முத்தம்பட்டி, நீர்முள்ளிகுட்டை, சிங்கிபுரம்‌, அயோத்தியாபட்டணம்,‌ வலசையூர்,‌ குள்ளம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் தேடும்‌ பணியில்‌ ஈடுபட்டு  வருகிறார். மேலும் ஆட்டோவில் தனது கணவர் புகைப்படம் இருக்கும் போஸ்டர் ஒட்டி, துண்டு பிரசுரங்களை விநியோகித்து தனது கணவரை தேடி வருகிறார்‌.கணவரை தேடி மனைவியும், அப்பாவை தேடி மகனும் மகளும் நாள் கணக்கில் இவ்வாறு கிராம கிராம சென்று வருகின்றனர். கணவனைக்‌ காணவில்லை என்று புகார்‌ கொடுப்பதோடு நிறுத்திவிடாமல்‌ ஆட்டோவில்‌ வீதி வீதியாக சென்று தானும் களத்தில் இறங்கி தேடி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதிகளை மக்களிடம் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கதறிய 9ம் வகுப்பு பள்ளி மாணவன்.. ஓயாமல் 4 பேர் டார்ச்சர்.. கட்டாய ஓரின**சேர்க்கையால் அதிர்ச்சி!
பல்கலைக்கழகத்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 2 மாணவர்கள் பலி.. 8 பேர் படுகாயம்.. பரபரப்பு!