மனைவியுடன் கள்ளக்காதலன் உல்லாசம்... நேரில் பார்த்த கணவன்!! நள்ளிரவில் கணவன் நடத்திய மரணமாஸ் சம்பவம்...

Published : Jun 25, 2019, 04:26 PM IST
மனைவியுடன் கள்ளக்காதலன் உல்லாசம்... நேரில் பார்த்த கணவன்!! நள்ளிரவில் கணவன் நடத்திய மரணமாஸ் சம்பவம்...

சுருக்கம்

தனது மனைவியுடனான கள்ளக்காதலை கைவிடாததால் பிரபல ரவுடியை, கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது மனைவியுடனான கள்ளக்காதலை கைவிடாததால் பிரபல ரவுடியை, கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள மகாளி குடி பகுதியை சேர்ந்த 35 வயதான ஆனந்த் மீது சமயபுரம் போலீஸ் ஸ்டேஷனில், கொலை உள்ளிட்ட வழக்குகள் உள்ளது.  ஆனந்துக்கும், பள்ளி விடையை சேர்ந்த தொழிலாளி விஜய் என்பவரின் மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி விஜய் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து ஆனந்த் விஜய் வீட்டிற்கு வந்து அவரது மனைவியோடு உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். ஆனந்துக்கு ஏற்கனவே கல்யாணமாகி குழந்தை உள்ள நிலையில் அவர் விஜய் மனைவியுடன் ரொம்பவே நெருக்கமாகா பழகி வந்துள்ளார். சினிமா, ஹோட்டல் என மனைவியைப்போல் வெளியில் சந்தோசமாக அழைத்து சென்று வந்துள்ளார்.

ரவுடி ஆனந்தும், தனது மனைவியும் திருச்சியில் ஊர் சுற்றுவதும் ஹோட்டலுக்கு செல்வதும் என நண்பர்கள், உறவினர்கள் சொல்வதைக்கேட்டு மனம் நொறுங்கிப்போனாராம் விஜய், இந்த விஷயத்தை தனது மனைவியிடம் கேட்டுள்ளார், ஆனந்தையும் கண்டித்துள்ளார். ஆனாலும் ஆனந்த் கள்ளக்காதலை கைவிடுவதாக இல்லை.

இந்நிலையில், நேற்று காலை விஜய் அப்பகுதியில் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, அவரது மனைவியை, ஆனந்த் மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்வதை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்தள்ளார், இந்த காட்சியை பார்த்த ஆத்திரத்தில் இருந்த அவர். ஆனந்தை இப்படியே விட்டு விட்டால் தனது குடும்பத்தையும், மனைவி வாழ்க்கையையும் சீரழித்து விடுவார் என்று எண்ணிய விஜய், ஆனந்தை கொலை செய்ய பிளான் போட்டுள்ளார். அதற்கான நாளை எதிர்பார்த்து காத்திருந்தார்.

இந்த நிலையில் நேற்றிரவு சமயபுரம் கூட்டு ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே உள்ள விறகு கடையில் செம போதையில் ஆனந்த் தூங்கி கொண்டிருந்தார். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட விஜய் அங்கு சென்றார். அப்போது அங்கு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த ஆனந்தின் தலையில், விஜய் பெரிய பாறாங்கல்லை தூக்கி போட்டு கொன்று விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதில் ஆனந்த் தூங்கிய நிலையிலேயே தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே  ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

இன்று அதி காலை அந்த வழியாக சென்ற பொது மக்கள், ஆனந்த் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து  போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஆனந்தை கொலை செய்தவர்கள் யாரென்று விசாரணை  நடத்தியதில், கள்ளக்காதல் விவகாரத்தில் விஜய் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?
காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்