ஜாதி பெயரை சொல்லி திட்டிய டீச்சர்... விசாரணைக்கு பின் ஆக்ஷனில் குதித்த கலெக்டர்!!

By sathish kFirst Published Jun 25, 2019, 4:02 PM IST
Highlights

பள்ளி மாணவ மாணவிகளை தலைமையாசிரியை ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டியும், அசிங்க அசிங்கமான வார்த்தைகளை பேசியும் நடந்துகொள்வதால் மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் அந்த தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 

பள்ளி மாணவ மாணவிகளை தலைமையாசிரியை ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டியும், அசிங்க அசிங்கமான வார்த்தைகளை பேசியும் நடந்துகொள்வதால் மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் அந்த தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் சரவணம்பட்டி அடுத்த கரட்டுமேடு பகுதியில், மாநகராட்சி ஆரம்ப பள்ளி செயல் பட்டு வருகிறது.  அந்த பள்ளியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அதே பள்ளியில், லட்சுமணன் மூர்த்தியின் மகளை அந்த பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியை ஜெயந்தி  பிரம்பால் அடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அந்த மாணவியின் ஜாதி பெயரை சொல்லியும், அசிங்க அசிங்கமாக காதில் கேட்கமுடியாத நாக்கு கூசும் வார்த்தைகளால்  திட்டுவதைப்போல திட்டித் தீர்த்துள்ளார்.

தலைமை ஆசிரியை அடித்ததில் சிறுமிக்கு கை கால்கள், தொடை, முதுகில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பின் பிரம்பால் அடித்த தழும்பும் ஏற்பட்டுள்ளது. பள்ளி முடிந்து வீடு சென்ற மாணவி அழுதுகொண்டே தலைமையாசிரியை தன்னை அடித்தது பற்றியும், அசிங்க அசிங்கமாக திட்டியதைப் பற்றியும் ஜாதி பெயரை சொல்லி கேவலமாக பேசியதையும் தனது அப்பா அம்மாவிடம் கதறி அழுதுள்ளார்.

இதனால் மனமுடைந்து போன அந்த சிறுமியின் பெற்றோர், அந்த பள்ளியில் படிக்கும் மற்ற குழந்தைகளின் பெற்றோர்களை சேர்த்துக்கொண்டு அந்த பள்ளி முன்பு கூடி முற்றுகையிட்டனர். அப்போது, அந்த தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். 

இது பற்றி பேசிய ஒரு பெண்மணி பேசுகையில்; குழந்தைகளுக்கு பாடம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியை, இப்படி நடந்து கொள்வது? சனியன்... நாயே... பேயே... மூதேவி... என திட்டுவது மட்டுமல்லாமல் ஜாதிப் பெயரைச் சொல்லியும் பேசுவதுதான் ஒரு ஆசிரியைக்கு அழகா? என கேட்டுள்ளார். 

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பாக கோவை கலெக்டரிடம் இதுகுறித்து மனு அளித்தனர். இது குறித்து விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி எஸ்.எஸ்.குளம் மாவட்ட கல்வி அதிகாரி கீதா விசாரணை மேற்கொண்ட நிலையில் தலைமை ஆசிரியை ஜெயந்தி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். 

click me!