கள்ளக்காதலை கைவிட மறுத்த கணவரின் ஆண் உறுப்பில் மனைவி வெந்நீரை ஊற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்காதலை கைவிட மறுத்த கணவரின் ஆண் உறுப்பில் மனைவி வெந்நீரை ஊற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ்(32). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிரியா(30). இந்த தம்பதிக்கு 2 வயதில் மகன், 1 வயதில் மகள் உள்ளனர். இந்நிலையில், தனியார் நிறுவனத்தில் உடன் பணியாற்றும் பெண்ணிற்கும் தங்கராஜிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அடிக்கடி கள்ளக்காதலியும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்த விவகாரம் நாளடைவில் மனைவிக்கு தெரியவந்தது. இதனை அறிந்த அவரது மனைவி கள்ளக்காதலை கைவிடுமாறு கூறிவந்துள்ளார். கடந்த ஒரு மாதமாக தம்பதிக்குள் இது தொடர்பாக கடும் வாக்குவாதம், தகராறு ஏற்பட்டு வந்தது. ஆனால், இதனை பெரிதாக எடுத்து கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்து வந்துள்ளார்.
இதையும் படிங்க;- புருஷனை இழந்த நீ இப்படி செய்யறது தப்புமா! மகளுக்கு அட்வைஸ் செய்த பெற்றோர்.. ஆத்திரத்தில் வாலிபர் செய்த பகீர்.!
இந்நிலையில், நேற்று முன்தினம் தங்கராஜ் கள்ளக்காதலியை சந்தித்து விட்டு இரவு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, கணவர் வீட்டில் படுத்து தூங்கினார். நள்ளிரவில் மனக்குமுறலில் இருந்த இளம்பெண் கணவருக்கு சரியான பாடம் புகட்டினால் மட்டுமே திருந்துவார் என்று எண்ணினார்.
வீட்டில் அடுப்பு பற்ற வைத்து வெந்நீரை கொதிக்க வைத்தார். ஆவி பறக்க கொதித்துக்கொண்டிருந்த வெந்நீரை தூக்கி வந்து வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கணவனின் ஆடைகளை விலக்கி விட்டு அவரது மர்ம உறுப்பில் வெந்நீரை ஊற்றினார். வலி தாங்க முடியாமல் கணவர் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் தங்கராஜை மீட்டு பாணாவரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க;- செத்த பிறகும்.. 75 வயது காமக்கொடூரனை அடையாளம் காட்டிய சிறுமி.. வீடியோ எடுத்தவர்களுக்கும் ஆப்பு..!