கள்ளக்காதலிக்காக மனைவியை கொன்ற கணவர்.. மாறுவேடத்தில் சுற்றியபோது கைது.. போலீசில் அதிர்ச்சி வாக்குமூலம்.!

Published : Oct 10, 2021, 06:58 PM IST
கள்ளக்காதலிக்காக மனைவியை கொன்ற கணவர்.. மாறுவேடத்தில் சுற்றியபோது கைது.. போலீசில் அதிர்ச்சி வாக்குமூலம்.!

சுருக்கம்

அர்ச்சனாவிடம், ‘திவ்யாவை பிரிந்து வந்துவிட்டேன். வெளியூர் சென்று ஒன்றாக வாழலாம்’ எனக்கூறினேன். அதன்படி அச்சனாவை அழைத்துக்கொண்டு ஊட்டி, கொடைக்கானல், பொள்ளாச்சி ஆகிய இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்தேன். பழனிக்கு சென்று நானும், எனது குழந்தையும் மொட்டை அடித்துக்கொண்டோம். 

மனைவியை பெட்ரோல் ஊற்றி கொலை செய்து விட்டு கள்ளக்காதலியுடன் மொட்டை அடித்துக்கொண்டு மாறுவேடத்தில் குடும்பம் நடத்தி வந்த சத்தியமூர்த்தியை போலீசார் கைது செய்துள்ளனர். 

திருப்பத்தூர் அருகே உள்ள புதுபூங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி(30). ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். இவரது மனைவி திவ்யா (24). இவர்களுக்கு வர்ஷினி(3) என்ற மகள் உள்ளார். கடந்த மாதம் 25ம் தேதி சத்தியமூர்த்தி, கோயிலுக்கு செல்லலாம் எனக்கூறி குளிர்பானத்தில் மயங்க மருந்து கொடுத்து பெட்ரோல் ஊற்றி எரித்து மனைவியை கொலை செய்துள்ளார். இதனையடுத்து, குழந்தையுடன் தலைமறைவாக இருந்து வந்த சத்தியமூர்த்தியை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். பின்னர், தஞ்சாவூரில் மொட்டை அடித்துக்கொண்டு மாறுவேடத்தில் கள்ளக்காதலியுடன் வீடு எடுத்து தங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், பல்வேறு அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். 

திவ்யாவின் உறவினர் பெண்ணான சென்னையில் நர்சிங் படிக்கும் அர்ச்சனாவுக்கு, எனது பெண் குழந்தையின் மீது அதிக பாசம் இருந்தது. இதனால் அவர் மீது எனக்கும் காதல் ஏற்பட்டது. இதையறிந்த திவ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சில நாட்கள் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனையடுத்து, சத்தியமூர்த்தி நாம் சேர்ந்து வாழலாம் என கூறி மனைவியை சமாதானம் செய்துள்ளார். இதை நம்பிய திவ்யா, என்னை ஏற்றுக்கொண்டார். சம்பவத்திற்கு முந்தைய நாள் கோயிலுக்கு சென்று வரலாம் எனக்கூறி திவ்யா மற்றும் குழந்தையை அழைத்துக்கொண்டு போக்குவரத்து அலுவலகம் அருகே சென்றேன். அங்கு திவ்யாவிற்கு தெரியாமல் மயக்க மாத்திரை கலந்த குளிர்பானத்தை கொடுத்தேன். திவ்யா மயங்கியதுமே பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றுள்ளார். 

இதையடுத்து நான் திவ்யாவை பிரிந்து சென்றுவிட்டேன். சில மாதங்களுக்கு பின் மீண்டும் திவ்யாவிடம் சென்று, அர்ச்சனாவை மறந்துவிட்டேன். இனிமேல் உன்னுடன்தான் வாழ்வேன் எனக்கூறினேன். இதை நம்பிய திவ்யா, என்னை ஏற்றுக்கொண்டார். சம்பவத்திற்கு முந்தைய நாள் கோயிலுக்கு சென்று வரலாம் எனக்கூறி திவ்யா மற்றும் குழந்தையை அழைத்துக்கொண்டு எலவம்பட்டி அருகே வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே சென்றேன். அங்கு திவ்யாவிற்கு தெரியாமல் மயக்க மாத்திரை கலந்த குளிர்பானத்தை கொடுத்தேன். இதை குடித்த திவ்யா மயங்கி விழுந்தார். உடனே  பெட்ரோலை எடுத்துவந்து, திவ்யாவின் உடல் மீது ஊற்றி தீ வைத்துவிட்டு குழந்தையுடன் சென்னைக்கு சென்றுவிட்டேன்.

அங்கு அர்ச்சனாவிடம், ‘திவ்யாவை பிரிந்து வந்துவிட்டேன். வெளியூர் சென்று ஒன்றாக வாழலாம்’ எனக்கூறினேன். அதன்படி அச்சனாவை அழைத்துக்கொண்டு ஊட்டி, கொடைக்கானல், பொள்ளாச்சி ஆகிய இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்தேன். பழனிக்கு சென்று நானும், எனது குழந்தையும் மொட்டை அடித்துக்கொண்டோம். பின்னர் 3 பேரும் தஞ்சாவூர் சென்று ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்தோம். இருப்பினும் போலீசார் எங்களை பிடித்துவிட்டனர் என்றார்.  இதையடுத்து போலீசார், சத்தியமூர்த்தியை நேற்றிரவு திருப்பத்தூர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

Salem Crime: இரண்டு குழந்தைகளை பெற்றும் அடங்காத 23 வயது லலிதா.. அலறிய சேலம்.. நடந்தது என்ன?
Chennai Crime: ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! கணவனை துண்டு துண்டாக வெட்டி கொன்றது ஏன்? சிக்கிய மனைவி பகீர்