தஞ்சையில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை ஒரே நாளில் மீட்பு… கடத்தல்காரியின் பரபரப்பு பின்னணி தகவல்கள்…!

By manimegalai aFirst Published Oct 9, 2021, 7:40 PM IST
Highlights

தாம் கர்ப்பமாக இருப்பதாக உறவினர்களை நம்பவைத்த விஜி, தஞ்சை மருத்துவமனையில் குழந்தையை கடத்தி அதனை தனது குழந்தை என காட்ட சதித் திட்டம் தீட்டியிருந்தார்.

தாம் கர்ப்பமாக இருப்பதாக உறவினர்களை நம்பவைத்த விஜி, தஞ்சை மருத்துவமனையில் குழந்தையை கடத்தி அதனை தனது குழந்தை என காட்ட சதித் திட்டம் தீட்டியிருந்தார்.

தஞ்சை பர்மா காலணியை சேர்ந்த குணசேகரன் மனைவி ராஜலெட்சுமி பிரசவத்திற்காக தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், தாய்யை கவனித்துக்கொள்ள யாருமில்லை. இருவரும் காதல் திருமணம் செய்ததால் உறவினர்கள் ஒதுக்கிவைத்துவிட்டதாக கூறப்படுகிற்து. இந்தநிலையில், தமது உறவுப் பெண் ஒருவரை பிரசவத்திற்காக அனுமதித்துள்ளதாக கூறி குணசேகரன் – ராஜெலெட்சுமி தம்பதியிடம் அறிமுகமாகிய ஒரு பெண் அவர்களுக்கு உதவிகளை செய்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று காலையில் கணவன், மனைவியின் கவனத்தை திசை திருப்பிவிட்டு பிறந்து நான்கு நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை அப்பெண் கடத்திச் சென்றார். விவரம் அறிந்து கதறி துடித்த ராஜலெட்சுமி போலீஸில் புகார் அளித்தார். மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமாராக்களை ஆய்வு செய்ததில் அந்த பெண் கட்டை பையில் வைத்து குழந்தையை எடுத்துச்சென்றதும், பின்னர் ஆட்டோவில் ஏறி மாயமாகியதும் உறுதியானது.

சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து கடத்தல்காரியை தஞ்சை போலீஸார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் கடத்தப்பட்ட குழந்தை ஒரே நாளில் பட்டுக்கோட்டையில் மீட்கப்பட்டது. குழந்தையை கடத்திய விஜி என்ற பெண்ணையும் கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையை பெற்றோர்களிடம் ஒப்படைத்தபோது அவர்களும், மருத்துவமனை ஊழியர்களும் நெகிழ்ச்சி அடைந்தனர்.

இதனிடையே கடத்தல்காரி விஜி பற்றி போலீஸார் கூறுகையில், தமக்கு வேண்டியவர்களிடம் இருந்து சொத்தை எழுதி வாங்கவே அவர் குழந்தை கடத்தலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர். குழந்தை கடத்தலுக்கும் ஆட்டோ ஓட்டுனருக்கும் எந்த தொடர்பும் கிடையாது. பையின் உள்ளே குழந்தை உறங்கிக்கொண்டிருந்ததால் அவராலும் குழந்தை கடத்தலை உறுதிப்ப்டுத்த முடியவில்லை. ஆட்டோ ஓட்டுனர் வழங்கிய தகவலால் தான் 14 மணி நேரத்தில் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. தாம் கர்ப்பமாக இருப்பதாக உறவினர்களிடம் கூறியிருந்த விஜி, குழந்தையை கடத்தி அதனை நிரூபிக்க சதித்திட்டம் தீட்டியிருந்தாரா என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

click me!