தலைக்கேறிய போதை.. அப்பாவி இளைஞரை பீர் பாட்டிலால் தாக்கிய ரவுடிகள்.. அதிர வைக்கும் காட்சிகள்.!

Published : Oct 09, 2021, 03:37 PM ISTUpdated : Oct 09, 2021, 04:06 PM IST
தலைக்கேறிய போதை.. அப்பாவி இளைஞரை பீர் பாட்டிலால் தாக்கிய ரவுடிகள்.. அதிர வைக்கும் காட்சிகள்.!

சுருக்கம்

அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிலையம் எதிரில் உள்ள ஒயின்ஷாப்பில் ரவுடிகள் அப்பாவி இளைஞர்களை பீர் பாட்டில் கொண்டு தாக்கும் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிலையம் எதிரில் உள்ள ஒயின்ஷாப்பில் ரவுடிகள் அப்பாவி இளைஞர்களை பீர் பாட்டில் கொண்டு தாக்கும் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்தவர் விநாயகம் (21). இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் எதிரே உள்ள செல்வம் பேக்கரி கடையில் பணியாற்றி வருகிறார். இவர் பணிபுரியும் கடையில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் அருகில் இருக்கக்கூடிய அரசு மதுபான கடையில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த மதுபான கடையில் மது அருந்தி விட்டு வந்த போதை ஆசாமிகள் விநாயகத்திடம் தகராறு செய்துள்ளனர்.

இதனையடுத்து தகராறில் ஈடுபட்டவர்களை விநாயகம் எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள் விநாயகத்தை கடுமையாக தாக்கியுள்ளனர் பின்னர்,  மதுபான பாரில் மூட்டைகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த பீர் பாட்டில்களை எடுத்து வந்து விநாயகத்தின் தலையிலேயே தாக்குதல் நடத்தியுள்ளனர். 

இதில், காயம் அடைந்த விநாயகம் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்மு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வைரலானதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

திருமணமான 3 மாதத்தில் நிகிலா.. தடுக்க வந்த அண்ணன்.. இருவரின் கதையை முடித்ததும் வேறு வழியில்லாமல் தந்தை மகன் எடுத்த முடிவு
அதிமுக நகர இளைஞரணி இணைச் செயலாளரை தட்டித்தூக்கிய போலீஸ்.. வெளியான அதிர்ச்சி காரணம்!