ப.சிதம்பரத்தின் உறவினர் கொல்லப்பட்ட வழக்கு…. குற்றவாளிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு!

By manimegalai a  |  First Published Oct 8, 2021, 10:06 PM IST

கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், ஆட்கடத்தலுக்கு 10 ஆண்டுகள், தடயங்களை அழித்ததற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.


கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், ஆட்கடத்தலுக்கு 10 ஆண்டுகள், தடயங்களை அழித்ததற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினரான திருப்பூரைச் சேர்ந்த பின்னலாடை நிறுவன அதிபர் சிவமூர்த்தி கடந்த 2018-ல் கொலை செய்யப்பட்டார். சிவமூர்த்தியை கடத்திய கும்பல் அவரிடம் பணம் கேட்டு மிரட்டியது. திட்டம் பலிக்கததால் சிவமூர்த்தியை அந்தக் கும்பல் கொடூரமாக கொலை செய்தது. இந்த விவகாரம் அப்போது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

Tap to resize

Latest Videos

இந்த வழக்கில் மூர்த்தி, மணிகண்டன், கவுதமன், விமல் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. கொடூர கொலை குறித்த விசாரணை, திருப்பூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்ட நால்வர் மீது குற்றம் நிரூபனம் ஆனதால் அவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். மேலும் நான்கு பேருக்கும் கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன் தொழிலதிபரை கடத்திய குற்றத்திற்காக கூடுதலாக 10 ஆண்டுகள் சிறை, ரூ.1000 அபராதம் மற்றும் தடயங்களை அழித்ததற்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

click me!