டாக்டர் மாப்பிள்ளைன்னா சும்மாவா? 200 சவரன் நகை வாங்கி வா. மனைவிக்கு டார்ச்சர்.. 8 பேர் மீது வழக்கு.

By Ezhilarasan BabuFirst Published Oct 8, 2021, 1:17 PM IST
Highlights

திருமணம் நடந்து ஓர் ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் வினோத்- மோனிகா தம்பதியருக்கு இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் திடீரென தனது கணவன், மாமியார், மாமனார் மீது காவல் நிலையத்தில் மோனிகா வரதட்சணை கொடுமை புகார் கொடுத்துள்ளார். 

டாக்டர் மாப்பிள்ளைன்னா சும்மாவா? ஒரு மருத்துவமனையையே கட்டி கொடுக்க  தயாராக இருக்கிறார்கள், ஆனால் 200 சவரன் நகை கூட முழுசா போட துப்பு இல்லை என கூறி கட்டிய மனைவியை டார்ச்சர் செய்து வந்த கணவன் மற்றும் மாமியார், மாமனார் என 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் சென்னை கொளத்தூரில் நடந்துள்ளது. பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருமணம் செய்து கொள்வதாக கூறி காதலித்து கற்பழித்து ஏமாற்றுவது, காதலிக்க மறுக்கும் பெண்கள் முகத்தில் ஆசிட் வீசிவது போன்ற குற்ற சம்பவங்கள் ஒருபுறம் நடந்து வரும் நிலையில், கட்டிய மனைவியை வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தும் குடும்ப வன்முறைகள் சமீபகாலமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.இந்த வரிசையில் கட்டிய மனைவியை 200 சவரன் நகை கேட்டு கணவன், மாமியார், மாமனார் என குடும்பமே அடித்து கொடுமை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதையும் படியுங்கள் : அதிமுக பொன்விழா தினத்தில், ஜெ நினைவிடத்தில் விஸ்வரூபம் எடுக்க போகும் சசிகலா.?? அலர்ட் ஆகும் ஓபிஎஸ் இபிஎஸ்.

சென்னை கொளத்தூர் திருமுருகன் நகரைச் சேர்ந்தவர் வினோத் குமார், மருத்துவரான இவர் தனியார் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார். கோவையை பூர்விகமாக கொண்ட மோனிகா  என்ற பெண்ணுடன் கடந்த ஆண்டு மருத்துவர் வினோத் குமாருக்கு திருமணம் நடந்தது. தனியார் ஐஏஎஸ் பயிற்சி அகாடமியில் மோனிகா ஐஏஎஸ் பயிற்சி மேற்கொண்டு வந்த நிலையில், மேட்ரிமோனியல் மூலம் மருத்துவர் வினோத்குமாருடன் அவருக்கு திருமணம் நடைபெற்றது.  நிச்சயதார்த்தத்தின் போது  200 சவரன் நகை போட வேண்டும் என வினோத் குமாரின் பெற்றோர் கேட்ட நிலையில், தங்கள் பெண்ணுக்கு கோடிக்கணக்கான சொத்துக்கள் இருக்கிறது என்றும், அது அனைத்தும் தங்கள் பெண்ணுக்கு தான் என கூறி அவரது பெற்றோர்கள், 120 சவரன் நகை கொடுப்பதாக கூறி இறுதியாக 80 சவரன் நகையுடன் திருமணத்தை முடித்து வைத்தனர்.

திருமணம் நடந்து ஓர் ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் வினோத்- மோனிகா தம்பதியருக்கு இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் திடீரென தனது கணவன், மாமியார், மாமனார் மீது காவல் நிலையத்தில் மோனிகா வரதட்சணை கொடுமை புகார் கொடுத்துள்ளார். அதில், திருமணத்திற்குப் பின்னர் சென்னைக்கு வந்த தன்னை கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தார் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாககவும், டாக்டர் வினோத்குமாரின் தந்தை காண்டிபன், தாய் ரமணி, தம்பி கவுசிக், மற்றும் அவர்களின் அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் வினோத் குமாரின் சித்தப்பா ரவி, மாமா நெடுமாறன், பெரியப்பா பார்த்திபன் குடும்பத்தினரும் மோனிகாவை துன்புறுத்தி வந்ததாக புகாரில் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்: அரசை மிரட்டி பில்டப் கொடுத்த அண்ணாமலை.. 600 பாஜகவினர் மீது கேஸ் போட்டு அலறவிட்ட தமிழக போலீஸ்.

டாக்டர் மாப்பிள்ளை என்றால் சும்மாவா? பெண் கொடுத்து புதிதாக ஒரு மருத்துவமனையையே கட்டி கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள். ஆனால் 200 சவரன் நகை கூட உங்கள் வீட்டில் முழுசாக போட முடியவில்லை, எனக்கூறி தன்னை தொடர்ந்து அவமானப்படுத்தி வருவதாகவும், தான் கர்ப்பமாக இருந்த காலத்தில் இரட்டை பெண் குழந்தைகள் வயிற்றில் இருப்பதை அறிந்து தனது கணவரிடம் அதை கூறியபோது, தான் கொடுத்த மாத்திரையால் தான் இரட்டை குழந்தை வந்தது என தன் கணவர் வினோத்  கூறியதைக் கேட்டு தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் அதில் அவர் கூறியுள்ளார். 

அதே போல் பிரசவத்திற்கு, தாய் வீட்டிற்கு சென்றிருந்த போது வீட்டுக்கு வரும்போது, குழந்தைகளுடன் 200 சவரன் நகையுடன் வரவேண்டும் இல்லை என்றால் எங்கள் மகனுக்கு ஒரு மருத்துவமனையை கட்டிக்கொடுக்கும் வேறொரு பெண்ணை பார்க்க நேரிடும் எனக் கூறி தங்களை எச்சரித்ததாகவும் மோனிகா தெரிவித்துள்ளார். அவரின் இந்த புகாரை விசாரித்த வில்லிவாக்கம் மகளீர் போலீசார் புகாரில் உண்மைத் தன்மை இருப்பதை அறிந்து,  கணவன் டாக்டர் வினோத் குமார் மற்றும் அவரது தாய், தந்தை மற்றும் அவர்களது உறவினர்கள் என மொத்தம் 8 பேர் மீது வரதட்சணை கொடுமை செய்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் டாக்டர் வினோத் குமார் தலைமறைவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!