வீட்டில் அடிக்கடி உல்லாசம்.. தாயின் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட சிறுவன் ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க கொலை.!

Published : Oct 08, 2021, 08:37 PM IST
வீட்டில் அடிக்கடி உல்லாசம்.. தாயின் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட சிறுவன் ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க  கொலை.!

சுருக்கம்

யாரும் இல்லாத நேரத்தில் இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். தாயின் கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக கீதாவின் மகன் நந்துவுக்கு தெரியவந்தது. இதுகுறித்து தனது தாயிடம் இனிமேல் சக்திவேல் வீட்டுக்கு வரக்கூடாது என கூறியுள்ளார். ஆனாலும், அடிக்கடி சக்திவேல் வீட்டிற்கு வந்ததால் நந்துவுக்கும் சக்திவேலுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

தாயின் கள்ளக்காதல் விவகாரத்தில் சிறுவன் கொடூரமாக குத்திக்கொலை செய்த சம்பவம் தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் ஹலசூரு பகுதியைச் சேர்ந்தவர் கீதா. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 வருடங்களாக தனியாக வசித்து வருகிறார்.  வீட்டுவேலை செய்து பிள்ளைகளை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில், கீதாவுக்கு ஆட்டோ ஓட்டுநர் சக்திவேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இதனையடுத்து, யாரும் இல்லாத நேரத்தில் இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். தாயின் கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக கீதாவின் மகன் நந்துவுக்கு தெரியவந்தது. இதுகுறித்து தனது தாயிடம் இனிமேல் சக்திவேல் வீட்டுக்கு வரக்கூடாது என கூறியுள்ளார். ஆனாலும், அடிக்கடி சக்திவேல் வீட்டிற்கு வந்ததால் நந்துவுக்கும் சக்திவேலுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்நிலையில் கடந்த 4-ம் தேதி இரவு கீதாவை சந்திப்பதற்காக சக்திவேல் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சிறுவனுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தில் சக்திவேல் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்த வந்து சிறுவனை கொடூரமாக குத்திவிட்டு தப்பியோடியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த சிறுவன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால்,  சிறுவன் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய பிறகு ஆட்டோ ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாயின் கள்ளக்காதல் விவகாரத்தால் மகன் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

பல்கலைக்கழகத்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 2 மாணவர்கள் பலி.. 8 பேர் படுகாயம்.. பரபரப்பு!
திருமணமான 3 மாதத்தில் நிகிலா.. தடுக்க வந்த அண்ணன்.. இருவரின் கதையை முடித்ததும் வேறு வழியில்லாமல் தந்தை மகன் எடுத்த முடிவு