கணவனை வெட்டி கொன்ற மனைவி... விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

Published : Sep 28, 2022, 07:59 PM IST
கணவனை வெட்டி கொன்ற மனைவி... விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

சுருக்கம்

சட்டீஸ்கரில் தன்னை கேலி செய்த கணவரை மனைவி வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சட்டீஸ்கரில் தன்னை கேலி செய்த கணவரை மனைவி வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டீஸ்கர் துர்க் மாவட்டத்தில் உள்ள அம்ளிஸ்வர் கிராமத்தை சேர்ந்தவர். ஆனந்த் சோன்வான். இவரது மனைவி சங்கீதா சோன்வானி. இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஆனந்த் சோன்வானிக்கும் அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே வழக்கம் போல் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஸ்லீவ்லெஸ்சில் ஏறிய இளம் பெண்.. சூடான ஆட்டோ டிரைவர்.. அந்த இடத்தில் கைவைத்து அசிங்கம்.

இந்த வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த சங்கீதா வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து கணவன் ஆனந்தை வெட்டி கொலை செய்துள்ளார்.  மேலும் கூர்மையான ஆயுதத்தை கொண்டு கணவனின் ஆணுறுப்பை அவரது மனைவி வெட்டி எடுத்துள்ளார். இதுக்குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சங்கீதா மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொலைக்கான காரணம் தெரியவந்தது. 

இதையும் படிங்க: Flipkart ஆஃபர் மோசடி! 80 ஆயிரம் ரூபாய் செலுத்தி ட்ரோன் ஆர்டர் செய்தவருக்கு அதிர்ச்சி!!

மேலும் இதுக்குறித்து காவல் துணைப் பிரிவு அதிகாரி தேவன்ஷ் ரத்தோர் கூறுகையில், ஆனந்த் அவரது மனைவி சங்கீதாவின் கருப்பு நிறத்தை வைத்து தினமும் கேலி செய்து வந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தம்பதியினர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் மேலும் ஆத்திரமடைந்த சங்கீதா தனது கணவரை வீட்டில் வைத்திருந்த கோடரியால் தாக்கி சம்பவ இடத்திலேயே அவரைக் கொலை செய்துள்ளார். மேலும் கூர்மையான ஆயுதத்தால் அந்தரங்க உறுப்பு துண்டித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!