மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய குடிமகன்; மது அருந்த பணம் தர மறுத்ததால் ஆத்திரம்

Published : Sep 13, 2023, 03:31 PM ISTUpdated : Jul 20, 2024, 12:09 AM IST
மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய குடிமகன்; மது அருந்த பணம் தர மறுத்ததால் ஆத்திரம்

சுருக்கம்

புதுச்சேரியில் மது அருந்த பணம் தர மறுத்த மனைவியை புடவையால் கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு நாடகமாடிய கணவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்

புதுச்சேரி மங்களம் தொகுதிக்கு உட்பட்ட அனந்தபுரம் கிராமத்தில் உள்ள ஆனந்தா நகர் பாரதி வீதியைச் சேர்ந்தவர்கள் ராஜேந்திரன் - கலையரசி தம்பதியினர். இவர்களுக்கு ராஜசேகர் (வயது 25) என்கிற மகன் உள்ளார். இந்நிலையில் கலையரசி அவர்கள் வசித்து வரும் வீட்டின் வாசலில் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை அக்கம் பக்கத்தினர் பார்த்து வில்லியனூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். 

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்தனர்.

உதயநிதியின் சனாதன பேச்சுக்கு வாய் திறக்காத தமிழக மடாதிபதிகள்; இதெல்லாம் நியாயமாபா? கிருஷ்ணசாமி குமுறல்

இதனிடையே கலையரசியின் கணவரை காவல் துறையினர் அழைத்துச் சென்று விசாரணை செய்த போது வீட்டு வாசலில் இருந்த பீரோவின் கைப்பிடியில் கலையரசியின் புடவை மாட்டிக்கொண்டு கழுத்து நெரித்து இறந்ததாகவும், தான் செய்வது அறியாமல் தனது மனைவியின் உடலை வீட்டு வாசலில் போட்டு விட்டு பின் புறம் சென்று உரங்கி விட்டதாக தெரிவித்துள்ளார். 

இதில் ராஜேந்திரன் மீது சந்தேகம் அடைந்த காவல் துறையினர், உடனடியாக பிரேத பரிசோதனை அறிக்கையை பெற்று பார்த்த போது அதில் கலையரசி துன்புறுத்தப்பட்டு கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

ஒகேனக்கல் காவிரி கரையோரம் இளம் காதல் ஜோடி விபரீத முடிவு; காதலன் பலி, பள்ளி மாணவி கவலைக்கிடம்

இதனைத் தொடர்ந்து ராஜேந்திரனை காவல் துறையினர் மீண்டும் காவல் நிலையம் அழைத்து வந்து கிடுக்குப்பிடி விசாரணை செய்த போது தனக்கு மது அருந்த பணம் தராத காரணத்தால் தனது மனைவியிடம் சண்டையிட்டு புடவையை பின்பக்கமாக கழுத்தை நெறிக்கும் படி இழுத்து பிடித்து கொலை செய்ததை ஒப்புகொண்டுள்ளார். 

இதனை அடுத்து சந்தேக மரணம் என்று பதியப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றிய காவல் துறையினர் ராஜேந்திரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் மது அருந்த பணம் தராத மனைவியை கணவரே கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி