ப்ளூ பிலிம் போட்டுகாட்டி பெற்ற மகளுடன் பாலியல் இச்சை..? கேட்டால், போலீஸ்னு திமிர் பேச்சு வேற.. கதறும் மனைவி.

By Ezhilarasan BabuFirst Published Jul 28, 2021, 5:07 PM IST
Highlights

குடித்துவிட்டு தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். மேலும் ஆபாச படங்களை தனது குழந்தைகளை காண்பித்து வருகிறார். இது குறித்து கணவரிடம் கேட்டால் போலீஸ் அடி எப்படி இருக்கும் எனக்கூறி தன்னையும் தனது மகளையும் தாக்குவதாக அவர் கூறினார். 

தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வரும் போலீஸ் கணவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என மாதர் சங்கத்தினருடன் இணைந்து கீழ்ப்பாக்கம் காவல் நிலையம் அருகே மனைவி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

சென்னை எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிப்புரிந்து வருபவர் இளங்கோவன்.இவரது மனைவி ஆசிரியராக பணிப்புரிந்து வருகிறார். இவர்கள் கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.  இவர்களுக்கு 12 வயது மற்றும் 10 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் தனது மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுப்பதாக கடந்த 6 மாதத்திற்கு முன்பு தனது போலீஸ் கணவர் இளங்கோவன் மீது கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் அவரது மனைவி புகார் அளித்தார். புகாரின் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் இன்று மாதர் சங்கத்தினருடன் இணைந்து  கீழ்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 14 வருடங்களாக தனது  கணவர் தன்னுடன் சண்டையிட்டு வருவதாகவும், தினமும் குடித்துவிட்டு தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். மேலும் ஆபாச படங்களை தனது குழந்தைகளை காண்பித்து வருகிறார். இது குறித்து கணவரிடம் கேட்டால் போலீஸ் அடி எப்படி இருக்கும் எனக்கூறி தன்னையும் தனது மகளையும் தாக்குவதாக அவர் கூறினார். இதனால் தனது மகள் தற்கொலை செய்து கொள்ளபோவதாக தன்னிடம் கூறுவதாகவும், இதனால் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட தனது கணவரை தட்டிகேட்டதற்கு தன்னை தாக்கியதால் மனமுடைந்து தான் மற்றும் மகளும் பீர்பாட்டிலை மிக்ஸியில் போட்டு அரைத்து குடித்ததாக அவர் கூறினார். 

மேலும் ஏற்கெனவே தனது கணவர் கோயம்பேடு பகுதியில் நர்சை கைப்பிடித்து இழுத்ததாக 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் எனவும், பாலியல் தொல்லை கொடுத்த தனது போலீஸ் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கீழ்ப்பாக்கத்தில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி கணவர் தொடர்ந்து பிரச்சனை கொடுத்து வருவதாகவும், இவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கீழ்ப்பாக்கம் காவல் நிலையம் வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். உடனே கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கார்த்திகேயன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை சமாதானம் செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதனால் இந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

click me!