தொழிலதிபர் மனைவியை வளைத்துபோட்டு உல்லாசம்.. முன்னாள் MLA மருமகனின் காமலீலை.. DGP அலுவலத்தில் இளம் பெண் கதறல்.

By Ezhilarasan BabuFirst Published Jul 28, 2021, 8:56 AM IST
Highlights

பல மாதங்கள் கடந்த பின்னும், அருண்பிரகாஷ் தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாக்கி வந்ததால் சந்தேகமடைந்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டபோது, தன்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், உன்னை திருமணம் எல்லாம் செய்து கொள்ள முடியாது, வேண்டுமானால் இப்படியே இரு என அவர் கூறியதாகவும்,

திருமணம் செய்து கொள்வதாக கூறி விவாகரத்து ஆன பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்து, அவரை கர்ப்பமாக்கியதுடன் அந்தப் பெண்ணை ஏமாற்ற முயற்சிப்பதாக முன்னாள் எம்எல்ஏ வின் மருமகன் மீது பாதிக்கப்பட்ட பெண் டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகார் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, வரதட்சணை கேட்டு பெண்களை அடித்துத் துன்புறுத்துதல், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி உடலுறவு, சிறுமிகள் பாலியல் பலாத்காரம் என பல வகைகளில் கொடூரங்கள் அரங்கேறி வருகிறது. இதுபோன்ற குற்றச் சம்பவங்களை தடுக்க போலீசார் எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்தும், குற்றங்கள்  குறைந்தபாடில்லை. 

இந்நிலையில் கணவனிடமிருந்து விவாகரத்து பெற்ற பெண்ணை குறிவைத்து அந்தப் பெண்ணிடம் 7 கோடி ரூபாய் வரை பணத்தை மோசடி செய்து, அந்தப் பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்து, அவரை கர்ப்பமாக்கி  அவரை கைகழுவி முயற்சிக்கும் நபர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த புகாருக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்த பெண் கூறியதாவது.  தனது பெயர் சிந்துஜா என்றும், தான் கோவையில் ஒரு சாக்லேட் தயாரிக்கும் கம்பெனி  வைத்து நடத்தி வருவதாகவும், கடந்த சில  ஆண்டுகளுக்கு முன்னர் கோவையை சேர்ந்த மற்றொரு தொழிலதிபருடன் தனக்கு திருமணம் நடந்ததாகவும், பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து ஆன நிலையில், முன்னாள் கணவரின் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கத்தின் உறவினர் அருண்பிரகாஷ்  உடன் தனக்கு  நட்பு ஏற்பட்டதாகவும்,

பின்னர் அவர் தனது நிலைமை அறிந்து தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்ததன் அடிப்படையில், இருவரும் பல இடங்களுக்கு சுற்றி காதலித்து வந்ததாகவும்,  நாளடைவில் இருவரும் தனிக்குடித்தனம் நடத்தி அதன் மூலம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது என்றும் சிந்துஜா கூறினார். அருண்பிரகாஷ்  தன்னை திருமணம் செய்து கொள்வார் என்ற நம்பிக்கையில் அவருக்கு இதுவரை 7 கோடிக்கும் அதிகமாக பணம் செலவு செய்துள்ளதாகவும், தனது பெயரில் வங்கியில் கடன் வாங்கி அவருக்கு 3 சொகுசு கார்கள் வாங்கிக் கொடுத்ததாகவும் கூறினார்.

ஆனால் பல மாதங்கள் கடந்த பின்னும், அருண்பிரகாஷ் தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாக்கி வந்ததால் சந்தேகமடைந்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டபோது, தன்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், உன்னை திருமணம் எல்லாம் செய்து கொள்ள முடியாது, வேண்டுமானால் இப்படியே இரு என அவர் கூறியதாகவும், அதே போல் தான் முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கத்தின் மருமகன் உன்னை ஒழித்துக் கட்டி விடுவேன் என்று சிந்துஜாவை அருண்பிரகாஷ் மிரட்டியதுடன், கோவை தங்கத்தில் அடியாட்களுடன் சென்று கிரிஜாவின் குடும்பத்தினை தாக்கி கொலைமிரட்டல் விடுத்ததாகவும் சிந்துஜா கூறினார்.

இதுதொடர்பாக புலியகுளம் காவல் நிலையத்தில் அருண்பிரகாஷ் மீது புகார் கொடுத்ததாகவும், அதன் அடிப்படையில் அருண்பிரகாஷை வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், தான் செய்ததை ஒப்புக்கொண்ட அருண்பிரகாஷ், ஒரு வருடத்திற்குள் 1.5 கோடி ரூபாய் தருவதாக ஒப்புக்கொண்டார். ஆனாலும் வழக்கை வாபஸ் வாங்கும்படி கோவை தங்கத்தின் அடியாட்கள் தொடர்ந்து தன்னை மிரட்டி வருவதாகவும், தன்னை கொலை செய்து விடுவதாக தொடர்ந்து அவர்கள் எச்சரித்து வரும் நிலையில் தனக்கும், தனது குடும்பத்திற்கும் தனது உயிருக்கும் பாதுகாப்பு கேட்டு அருண்பிரகாஷ், மற்றும் கோவை தங்கம் உள்ளிட்டவர்கள்  மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புகாரை கொடுத்திருப்பதாகவும் சிந்துஜா கூறினார். 
 

click me!