காதல் மனைவிக்கு கேக் வாங்கி கொடுத்த மூத்தார்.. சந்தேகத்தால் அண்ணனை கொடூரமாக வெட்டிக்கொன்ற தம்பி..!

Published : Feb 03, 2021, 06:20 PM ISTUpdated : Feb 03, 2021, 06:23 PM IST
காதல் மனைவிக்கு கேக் வாங்கி கொடுத்த மூத்தார்.. சந்தேகத்தால் அண்ணனை கொடூரமாக வெட்டிக்கொன்ற தம்பி..!

சுருக்கம்

காதல் மனைவியின் பிறந்தநாளுக்கு கேக் வாங்கி கொடுத்த அண்ணனை தம்பி கொடூரமாக கொலை  செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதல் மனைவியின் பிறந்தநாளுக்கு கேக் வாங்கி கொடுத்த அண்ணனை தம்பி கொடூரமாக கொலை  செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் குமாரச்சேரி கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் யோவான் (25). இவரது சகோதரர் ஏசான் (22). கூலித்தொழிலாளிகள். ஏசான் மது பழக்கம் மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் சகோதரர்கள் இருவரும் வீட்டில் இருந்தனர். 

அப்போது திடீரென ஏசான் தான் வைத்திருந்த கத்தியால் யோவானின் தலை மற்றும் கழுத்து பகுதியில் வெட்டினார்.  படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏசானை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.அப்போது, போலீசார் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். 

அதில், நான் நெல்லூரில் துணிக்கடையில் வேலை செய்யும்போது அனுஷா என்பவரை காதலித்து 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டு நெல்லூரில் வசித்து வந்தேன். எனது சகோதரர் யோவான் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். கடந்த மார்ச் மாதம் குமாரச்சேரிக்கு வந்து தங்கினோம். இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு யோவான் ஊருக்கு சென்று அங்கு என் மனைவிக்கு பிறந்தநாள் கேக் வாங்கி கொடுத்து கொண்டாடியுள்ளார். இதனால் அவர் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த நான் எனது மனைவியுடன் எனது அண்ணன் தொடர்பில் இருப்பதாக கருதி அவரை நான் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தேன் என்று கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?
காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்